நாய்களுக்கு சப்பாத்தி.. எனக்கு பழைய சோறா? செத்துப்போ.. சோறு போட்டவரை குத்தி கொன்ற பிச்சைக்காரர்!
மும்பையில் நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மும்பை: நாய்களுக்கு சப்பாத்தி போட்டுவிட்டு தனக்கு பழைய சோறு போட்ட நபரை பிச்சைக்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் சார்யு பிரசாத். 52 வயதான இவர் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீட்டுக்கு தினசரி அந்த பகுதியை சேர்ந்த தன்குமார் என்ற 35 வயதான பிச்சைக்காரர் சாப்பாடு கேட்டு வருவது வழக்கம்.

நாய்களுக்கு சப்பாத்தி
அவருக்கு சார்யு பிரசாத் இதுவரை பழைய சோறுதான் போட்டு வந்துள்ளார். அதேநேரம் அந்த தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு சார்யு பிரசாத் சப்பாத்தி போட்டு வந்தார்.

பிச்சைக்காரருக்கு பழையசோறு
இந்நிலையில் சார்யு பிரசாத் வீட்டுக்கு நேற்று முன்தினம் பிச்சைக்காரர் தன்குமார் வழக்கம்போல சென்றுள்ளார். அப்போது சார்யு பிரசாத் எப்போதும் போல் வீட்டில் இருந்த பழைய உணவை அவருக்கு கொடுத்துவிட்டு, தெருநாய்களுக்கு சப்பாத்தி போட்டார்.

கத்தியால் குத்திய பிச்சைக்காரர்
இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரர் தன்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சார்யு பிரசாத்தை சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் பிச்சைக்காரர் தன்குமார்.

சம்பவ இடத்திலேயே பலி
இதில் வயிறு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் அடைந்த சார்யு பிரசாத் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சற்றுநேரத்திலேயே சார்யு பிரசாத் துடிதுடித்து இறந்து போனார்.

2 மணிநேரத்தில் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிச்சைக்காரர் தன்குமாரை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். பழைய சோறு போட்டதால் ஆத்திரமடைந்த பிச்சைக்காரர் ஒருவரை குத்தி கொலை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications