திருப்பதி தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் பிணம்- அதிர்ச்சியில் பக்தர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்ததையடுத்து பக்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் பக்தர்கள் திருப்பதி தெப்பக்குளத்தில் நீராடி கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத ஆண் பக்தரின் பிணம் ஒன்று மிதந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்தர்கள் திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருமலை தீயணைப்புப்படை வீரர்கள், போலீசார், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படை வீரர்கள் ஆண் பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்த பக்தர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெப்பக்குளத்தில் ஆகம விதிப்படி தோஷ நிவர்த்தி பூஜை செய்து பால் ஊற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications