மும்பையில் பணத்திற்காக மணல் வியாபாரியை போலீஸ்காரரே கொன்றது அம்பலம்.. பரபரப்பு வாக்கு மூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையை சேர்ந்த போலீஸ் ஒருவர் தனக்கு பணம் தராத நபரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முஸ்தாக் முலானி என்ற இந்த கான்ஸ்டேபிள் தனக்கு வர வேண்டிய பணத்தை தர மறுத்த நபரை கடத்தி கொலை செய்து இருக்கிறார்.

மேலும் கடத்தியது மட்டும் இல்லாமல் அவர் குடும்பத்தை மிரட்டியும் இருக்கிறார். முஸ்தபா ஷேக் என்ற நபரை இவர் கடத்தி, கொலை செய்து மறைத்து வைத்தது போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவர் கடத்திய உடலை மிகவும் வித்தியாசமாக மறைத்து வைத்து இருந்ததாகவும், போலீசிடம் மிக இயல்பாக நடித்ததாகவும் கூறப்படுகிறது.

 பண பிரச்சனை

பண பிரச்சனை

மும்பையின் 'கன்டாவில்' என்ற பகுதியை சேர்ந்த மணல் வியாபாரி முஸ்தபா ஷேக். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டேபிளாக இருக்கும் முஸ்தாக் முலானி என்ற நபரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இதற்காக அவர் 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தக் கடனை அவர் பல நாட்களாக திருப்பித்தராமல் இருந்திருக்கிறார்.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்த நிலையில் பல நாட்கள் அவகாசம் கொடுத்தும் முஸ்தபா ஷேக் தான் வாங்கிய கடனை முஸ்தாக் முலானியிடம் திருப்பிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதையடுத்து கோவம் அடைந்த முஸ்தாக் ''உன்னை கடத்தி கொலை செய்துவிடுவேன்'' என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார். முஸ்தபா ஷேக்கின் மனைவியையும் தனியாக போன் செய்து மிரட்டி இருக்கிறார்.

 சொன்னதை செய்தார்

சொன்னதை செய்தார்

இந்த நிலையில் ஒரு நிலைமைக்கு மேல் பொறுமையை இழந்த கான்ஸ்டேபிள் முஸ்தாக் முலானி கடன் வாங்கிய முஸ்தபா ஷேக்கை கடத்த திட்டம் இட்டு இருக்கிறார். அதேபோல் அவர் வெளியில் செல்லும் நேரத்தை கண்காணித்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு நாள் லீவ் எடுத்து முஸ்தபா ஷேக்கை கடத்தி இருக்கிறார். மேலும் முஸ்தபா ஷேக்க்கின் மனைவிக்கு போன் செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

 போலீசுக்கு சென்றார்

போலீசுக்கு சென்றார்

இதையடுத்து பயந்து போன அந்த பெண் நகைகளை விற்று பணம் கொடுக்கலாம் என நினைத்து இருக்கிறார். ஆனால் பயம் அதிகரிக்கவே உடனே போலீசிடம் சென்று புகார் கொடுத்து இருக்கிறார். அதன்படி அந்த கான்ஸ்டேபிள் முஸ்தாக் முலானி மீது கடத்தல், கொலை செய்ய முயற்சி என நிறைய வழக்குகள் போடப்பட்டது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

 கொலை செய்த போலீஸ்

கொலை செய்த போலீஸ்

இந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி பணம் வராததால் கோவம் அடைந்த முஸ்தாக் முலானி, முஸ்தபா ஷேக்கை கொலை செய்தார். மேலும் கொலை செய்ததோடு மும்பை தேசிய நெடுஞசாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு அருகில் உடலை மறைத்து வைத்து இருக்கிறார். போலீஸ் அவரை தேடுவது தெரியாமல் சாதாரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்று பணியை தொடர்ந்து உள்ளார்.

 பணத்திற்க்காக செய்தேன்

பணத்திற்க்காக செய்தேன்

இந்த நிலையில் அவர் வந்து பணியை தொடர்ந்த சில மணி நேரம் பின் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்தது. விசாரணையில் "நான் பணத்திற்காகத்தான் இப்படி செய்தேன், உடலை நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் மறைத்து வைத்து இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். தற்போது கொலை செய்யப்பட்ட முஸ்தபா ஷேக் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A constable in Mumbai has arrested for kidnapping and murdering. The police constable Mustak Mulani allegedly then dumped the vicitm Mustafa Shaikh's body on the Mumbai highway.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற