அதென்ன 'பிராமணர் சுடுகாடு'? அதெப்படி அரசே பராமரிக்கலாம்? ஒடிஷாவில் வெடித்த 'சனாதன எதிர்ப்பு குரல்'
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம், பிராமணர்களுக்கு மட்டுமான சுடுகாட்டை அரசு செலவில் பராமரித்து வருவது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடும் இடங்களில் சுடுகாடுகளும் தப்பவில்லை. கவிஞர் அறிவுமதி,
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு

என ஹைக்கூ கவிதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இரட்டை சுடுகாடு, இரட்டை குவளை முறை சட்டவிரோதம் என்றாலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது; இதற்கு எதிரான போராட்டங்களும் தமிழ்நாட்டில் வலுவாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணாள் மெஸ், பிராமணாள் கஃபே போன்றவை கைவிடப்பட்டுவிட்டன. ஏனெனில் சனாதன தர்மத்தை நிலைநாட்டும் இத்தகைய இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சமூக நீதியாளர்களின் தொடர்ச்சியான குரல்.
தற்போது ஒடிஷாவிலும் இந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் செயல்பாடுகளுக்கு எதிரான குரல் வெடித்திருக்கிறது. ஒடிஷாவின் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம் அண்மையில் சுடுகாடு ஒன்றை சீரமைத்தது. அந்த சுடுகாட்டின் பெயரே 'பிராமணர் மயானம்' என்பதுதானாம். அதுவும் அரசாங்க நிதியில் பிராமணர்களுக்கான தனி மயானம் பராமரிக்கப்படுகிறது என்பதுதான் சர்ச்சையானது. இந்த மயானம் 155 ஆண்டுகள் பழமையானதும் கூடவாம்.
ஒடிஷா தலித் சமாஜ் நிர்வாகி நாகேந்திர ஜெனா கூறுகையில், பிராமணர்களுக்கு மட்டுமான மயானத்தை நகராட்சி நிர்வாகமே நீண்டகாலம் பராமரித்து வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதிய பாகுபாட்டை ஒரு அரசு அமைப்பே எப்படி ஊக்கப்படுத்த முடியும்? இந்த ஜாதிய வேறுபாடு விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார்.
சிபிஎம் கட்சியின் நிர்வாகி காயதார் தால் கூறுகையில், பிராமணர்களுக்கு மட்டுமேயான சுடுகாடு என்பது சட்டவிரோதமானது. அதே மயானத்தில் இதர ஜாதியை சேர்ந்தவர்களும் தங்களது உறவுகளுக்கு இறுதி சடங்குகளை செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அத்துடன் பிராமணர்களுக்கு மட்டும் தனி சுடுகாடு என்பது அரசியல் சாசனம் பிற சமூகத்தினருக்கும் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளை மீறிய ஒன்று. இதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒடிஷாவின் பிராமணர் சுடுகாடு விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications