For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் புகார் கொடுக்க சென்ற.. தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போலீசாரின் அராஜகம்.. ம.பி பயங்கரம்!

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கச் சென்ற பட்டியலின சிறுமியை தாக்கி காவல் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை குறைக்க பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் வழக்குப்பதிவு செய்ய காவலர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏய் நீ ரொம்ப குண்டா இருக்க.. மனைவியை பிரிய கணவர் செய்த செயல்.. உத்தர பிரதேச போலீஸ் தீவிர விசாரணை ஏய் நீ ரொம்ப குண்டா இருக்க.. மனைவியை பிரிய கணவர் செய்த செயல்.. உத்தர பிரதேச போலீஸ் தீவிர விசாரணை

இந்தியாவின் நிலைமை

இந்தியாவின் நிலைமை

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சுரண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசும், இதர தொண்டு நிறுவனங்களும் விழப்புணர்களை ஏற்படுத்தி வந்தாலும் இந்த பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியவில்லை. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கச் சென்ற பட்டியலின சிறுமியை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தல்

கடத்தல்

மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விளையாட வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் மூன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. எனவே சிறுமி காணாமல் போன நாளுக்கு அடுத்த நாளில் (ஆக. 27) சிறுமியின் பெற்றோர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஆக.30ம் தேதி வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்து பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து பாலியல் வன்கொடுமை

தன்னை பாபு கான் எனும் நபர் கடத்தி அவரது வீட்டில் வைத்து மூன்று நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது பெற்றோரிடம் சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் இந்த புகாரில் சிறுமியின் வாக்குமூலத்தை மாற்றி கொடுக்குமாறு காவலர்கள் இருவர் தங்களை வற்புறுத்தியதாக பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், சிறுமி வாக்குமூலத்தை மாற்றாததையடுத்து காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுமியை தாக்கியகதாகவும் தந்தை கூறியுள்ளார்.

போலீசாரின் மோசடி

போலீசாரின் மோசடி

பெற்றோர்கள் இருவரையும் வெளியேற்றிவிட்டு சிறுமியை கடுமையாக தாக்கி இரவு முழுவதும் ஸ்டேஷனிலேயே சிறுமி வைக்கப்பட்டிருந்திருக்கிறார். இந்த தொடர் போராட்டத்தையடுத்து, அடுத்த நாளும் வழக்குப்பதிவு செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் ஸ்டேஷனிலிருந்து விரட்டப்பட்டதாகவும் பின்னர் செப்.1ம் தேதி ஒருவழியாக புகார் பெறப்பட்டதாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த புகாரில் சிறுமியின் வயது 13க்கு பதிலாக 17 என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

மட்டுமல்லாது, சிறுமி கடத்தியது தொடர்பாக எந்த புகாரையும் காவலர்கள் இதில் குறிப்பிடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காவல் நிலையத்தில் வைத்திருந்ததற்காக சிட்டி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி அனூப் யாதவ், சப்-இன்ஸ்பெக்டர் மோகினி சர்மா மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குருதத் ஷேஷா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விதிமீறல்கள்

விதிமீறல்கள்

அதேபோல இந்த குற்றச் செயலை செய்த பாபுகான் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், போக்சோ, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில், குழந்தைகள் நலக் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது குற்றவாளியுடன் இன்ஸ்பெக்டர் யாதவ் அந்த வீட்டில் இருந்திருக்கிறார். சட்டப்படி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் குற்றவாளியை கொண்டு வரக்கூடாது. ஆனால் இதுபோன்ற பல விதிமுறைகள் இந்த வழக்கில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
In the state of Madhya Pradesh, a dalit girl who went to report sexual assault was assaulted and kept overnight in the police station has caused a great shock. As sexual crimes against women and children continue to rise in India, various political parties are pushing to reduce the crime. In this case, this incident has taken place. And while the police kept refusing to file a case, the case was registered only after a long struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X