ஆந்திராவில் சம்பவம்: உயர் அதிகாரி முகத்தில் மணலை வீசி பெண் அதிகாரி சாபம் - வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உயர் அதிகாரியின் முகத்தில் மீது மணலை வீசி சாபம் விட்டுள்ளார் பெண் அதிகாரி. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம்: கிராமங்களில் மனம் நொந்து சாபம் விடுபவர்கள் மண் அள்ளி தூற்றுவார்கள். அது போல ஒரு சம்பவம் ஆந்திராவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்துள்ளது. தன்னை துன்புறுத்தி மனம் நோக வைத்த உயரதிகாரியின் முகத்தில் மணலை அள்ளி வீசி சாபம் கொடுத்துள்ளார் பெண் அதிகாரி. விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மண் வீச்சுக்கு ஆளான அதிகாரியின் பெயர் புஷ்பரவரதன் என்பதாகும். இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலக துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி துணை ஆணையராக பணியாற்றி வரும் சாந்தி என்பவர்தான் மண்ணை வீசி சாபம் கொடுத்தவர்.

கடந்த சில வாரங்களாக புஷ்ப வர்தன் தன்னையும் மற்ற அதிகாரிகளையும் மனரீதியாக துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட கோபத்தின் காரணமாக அதிகாரிகளை பழிவாங்குவதாகவும், பணியிடமாற்றம் செய்வதாகவும், விசாரணைக்கு உத்தரவிடுவதாக கூறி மிரட்டுவதாகவும் சாந்தி குற்றம் சாட்டினார்.
இதன்காரணமாக புஷ்பவரதன் தன் அறையில் அலுவல் ரீதியான ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டு இருந்த போது அந்த அறைக்குள் வந்த உதவி கமிஷனர் சாந்தி கையில் கொண்டு வந்திருந்த மண்ணை புஷ்பவரதன் முகத்தில் வீசி விட்டு திட்டினார். இந்த காட்சி அந்த அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
சாந்தி கூறும், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளா புஷ்பவரதன், ஜூலை 14 முதல் நான் விசாகப்பட்டினத்தில் இல்லை. நான் யாரிடமும் பேசுவதற்கு கூட வாய்ப்பில்லை வியாழக்கிழமை தான் அலுவலகத்திற்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.
என் அலுவலகத்திற்குள் நுழைந்த சில நொடிகளில் என் மீது மணலை வீசிவிட்டு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி சாந்தி என்னை திட்டினார். இது தொடர்பாக சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications