For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராங் ரூட்லயா வர்ற?.. ஸ்விக்கி டெலிவரி பாயை ஷூவால் சரமாரியாக அடித்த பெண்! வீடியோ டிரென்ட்! போலீஸ் வலை

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் ராங் ரூட்டில் வந்தது மட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்தியதால் இளம் பெண் ஒருவர் தனது ஷூவை கழற்றி அந்த ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரை சரமாரியாக அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் உணவை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

அண்மையில் கூட ஸ்விக்கி நிறுவனம் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்ற ஒரு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியது. டெலிவரி செய்யும் நபர் ஒரு இடத்திலிருந்து குறிப்பிட்ட ஹோட்டலுக்கு போய், அங்கு உணவை பெற்று கொண்டு மீண்டும் வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பது எப்படி 10 நிமிடத்தில் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்தது.

 தீரன் சின்னமலை பிறந்தநாள்! தயங்கிநின்ற உதயநிதி! முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்திய கொங்கு ஈஸ்வரன்! தீரன் சின்னமலை பிறந்தநாள்! தயங்கிநின்ற உதயநிதி! முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்திய கொங்கு ஈஸ்வரன்!

நூடுல்ஸ்

நூடுல்ஸ்

அப்படியென்றால் நூடுல்ஸை மட்டுமே வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய வேண்டுமா என்ற கேலி பேச்சும் எழுந்தது. இது போல் 10 நிமிடத்தில் டெலிவரி என தங்கள் பணியாளர்களை கட்டாயப்படுத்தினால், அவர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவர்.

விபத்து

விபத்து

இல்லாவிட்டால் இவர்களால் மற்றவர்கள் விபத்தில் சிக்க நேரிடும். மேலும் டெலிவரி செய்யும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்ற காரணத்தால் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் போது நடந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் ஒரு சாலை எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்த சாலையில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியில் பயணம் செய்தார். அப்போது ராங் ரூட்டில் எதிரே ஸ்விக்கி டெலிவரி பாய் வந்து கொண்டிருந்தார். இதை சற்றும் எதிர்பாராத நிலையில் அவர் இந்த பெண்ணின் வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டு அந்த பெண் கீழே விழுந்தார்.

வண்டிக்கு சேதாரம்

வண்டிக்கு சேதாரம்

வண்டிக்கும் சேதாரம் ஏற்பட்டது. இதையடுத்து ராங் ரூட்டில் வருவாயா என அந்த நபரை திட்டிக் கொண்டே அந்த பெண் தனது ஷூவை கழற்றி சரமாரியாக தாக்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிடம் நிறுத்துமாறு கூறியும் அவர் நிறுத்தாமல் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தார். டெலிவரி பாய் திலீப் விஸ்வகர்மா (25) என்பவரின் புகாரின் பேரில் தன்னை தாக்கிய மதுசிங் எனும் பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.

புகாரின் பேரில் விசாரணை

புகாரின் பேரில் விசாரணை

பீட்ஸா டெலவரி செய்ய வேகமாக சென்ற போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதே ஏதாவது பெரிய வாகனத்தில் மோதி டெலிவரி பாய்க்கோ அல்லது அந்த வாகனத்தில் வந்தவருக்கோ ஏதேனும் உயிர் சேதமோ உறுப்பு சேதமோ ஏற்பட்டிருந்தால் என்னவாவது? அதற்காக இந்த பெண்ணும் அந்த நபரை தாக்கியது மிகவும் தவறு. அதிகபட்சமாக திட்டிவிட்டு போலீஸிடம் புகார் அளித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு சட்டத்தை எல்லாரும் கையில் எடுத்தால் என்ன அர்த்தம்? இதுக்கே இப்படி, இன்னும் 10 நிமிடத்தில் டெலிவரி எனும் திட்டம் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் பாருங்கள்!

English summary
A girl beats up a swiggy delivery boy with her shoe goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X