ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்து பைக்கால் நசுக்கிய கயவர்கள்.. முதுகெலும்பு உடைந்த சோகம்
ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர், சரமாரியாக தாக்கி அவர் மீது மோட்டார் சைக்கிளையும் ஏற்றியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி இடுப்புக்கு கீழ் செயலிழந்து வாதத்தில் முடங்கியுள்ளார்.
சுரு: ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராக்கேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேர் அந்த சிறுமியை வீட்டில் இருந்து தூக்கிச் சென்றுள்ளனர். கிராமத்தில் இருந்து 2 தொலைவில் சிறுமியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கிய அவர்கள், அவர் மீது மோட்டார் சைக்கிளையும் ஏற்றியுள்ளனர். இதில் சிறுமியின் முதுகெலும்பு உடைந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு இடுப்பின் கீழ் செயலிழந்து போனது தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த ராக்கேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வோலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications