மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் - பயிற்சியாளர் மீது துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை புகார்
மயக்க மருந்து கொடுத்து பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கிச்சூடுதல் வீராங்கனை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பயிற்சியாளரிடம் விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.
டெல்லி : மயக்க மருந்து கொடுத்து பயிற்சியாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்காக இளம்பெண் ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவருடன் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

அவ்வப்போது துப்பாக்கிச்சுடுதல் குறித்து இளம்பெண்ணுக்கு அந்த நபர் பயிற்சியளித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கிடையே பயிற்சியின் போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்த தனது பிறந்த நாளையொட்டி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அந்தப் பெண் பயிற்சியாளரை அழைத்துள்ளார்.
அப்போது குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலக்கி கொடுத்து பயிற்சியாளர் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு தன்னுடன் பேசுவதை அந்த பயிற்சியாளர் நிறுத்தி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
தன்னை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொள்ள மறுக்கும் பயிற்சியாளர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிப்பதாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பயிற்சியாளர் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில் பயிற்சியாளர் மீது சானக்யாபூரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட வீராங்கனை பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்த அந்த பயிற்சியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications