கடப்பா பெரிய தர்காவில் சந்தன கூடு திருவிழா.. "மாறுவேடத்தில்" வந்த பிரபலம்.. சைலண்ட்டாக பிரார்த்தனை!
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா பெரிய தர்காவில் நடந்த சந்தன கூடு திருவிழாவில் யார் அவரு.. சைலண்ட்டா நின்று வேடிக்கை பார்க்கிறாரே!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிரபல அமீன் பீர் பெரிய தர்கா உள்ளது. இங்கு சந்தனக் கூடு மற்றும் உரூஸ் திருவிழா பிரசித்திப்பெற்றது. இதில் கலந்து கொள்ள ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட விழாக்களில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அதாவது 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதித்ததால் இந்த தர்காவில் குறைந்த அளவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த சந்தன கூடு மற்றும் உரூஸ் திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். கடைசியாக 2019ஆம் ஆண்டு அந்த பெரிய தர்காவுக்கு சென்ற ரகுமான், அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மீண்டும் சந்தன கூடு விழாவில் சாதாரண பக்தர் போல் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் பெரிய தர்காவில் சந்தன கூடு திருவிழா மற்றும் உரூஸ் திருவிழா நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் சாதாரண நபர் போல் கலந்து கொண்டார். அந்த விழாவில் முகத்தில் மூக்கை மறைக்கும் படி மாஸ்க் அணிந்திருக்கிறார். அமைதியாக நின்று பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அது போல் இவர் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாவிலும் கலந்து கொள்வது வழக்கம். கடந்த வாரம் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இதில் பல குளறுபடிகள் ஏற்பாட்டாளர்களால் ரசிகர்களுக்கு நிகழ்ந்தது. இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரகுமான் மனம் வருந்தினார். மேலும் யாரெல்லாம் நிகழ்ச்சியை காணாமல் திரும்பி சென்றனரோ அவர்களுக்கெல்லாம் டிக்கெட் நகலை ஆன்லைனில் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பிச் செலுத்தி ரசிகர்களின் மனதை மகிழ்ச்சியடையச் செய்தார்.
ஏ.ஆர்.ரகுமான் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு விமர்சனம் செய்து வருவதால் அவரது நிகழ்வில் யாரோ செய்த தவறுக்கு இதை அரசியலாக்குகிறார்கள் என கூறி பல பிரபலங்கள் ரகுமானோடு துணை நின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications