மன்மோகன்சிங்குக்கு தவறான தகவல்களையே தெரிவித்து வந்தார் ஆ.ராசா: டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. புகார்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தெரிவிப்பதை முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் இறுதி வாதங்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முன்வைத்த வாதம்:

அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் பற்றி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தவறான தகவல்களை அளித்து வருவதை ராசா வழக்கமாகக் கொண்டிருந்தார். ராசாவுக்கு அப்போதைய பிரதமர் எழுதிய கடிதத்தில்கூட அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிப்படையாக நடத்தும்படி அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், நடைமுறையில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்களுக்கு முரணாக பிரதமருக்கு ராசா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம், தான் செய்வது தவறு என்பதை அறிந்தே அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும், அலைக்கற்றை கோரும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்கும் தேதியை முதலில் 2007, அக்டோபர் 10 என்பதற்கு பதிலாக அக்போடர் 1 எனவும், 2வதாக 2007, அக்டோபர் 1 என்பதற்குப் பதிலாக 2007, செப்டம்பர் 25 எனவும் ராசா திருத்தினார்.
இதைத் தொடர்ந்து அலைக்கற்றை உரிமம் கோரி செப்டம்பர் 24-ந் தேதி வரை 167 விண்ணப்பங்களும், அக்டோபர் 1 வரை மொத்தம் 575 விண்ணப்பங்கள் வந்தன.
ராசா தனது பேனாவால் மேற்கொண்ட ஒற்றை திருத்தத்தால் மொத்தம் வந்த 575 விண்ணப்பங்களில் 408 விண்ணப்பங்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற தகுதியற்றதாகக் கருதப்பட்டன
இவ்வாறு ஆனந்த் குரோவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து ராசாவின் நடவடிக்கை தொடர்பாக வாதங்களை முன்வைக்க ஆனந்த் குரோவர் அனுமதி கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, இன்றும் வாதத்தைத் தொடர அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications