பற்றி எரிந்த தலைமைச் செயலகம்.. அலறியடித்து ஓடிய அரசு ஊழியர்கள்! மத்தியப் பிரதேசத்தில் ஷாக்
போபால்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அம்மாநில தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. காலை 8 மணியளவில் கட்டிடத்திலிருந்து கருகிய வாடை வருவதை சில பணியாளர்கள் உணர்ந்திருக்கின்றனர். வாடை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிப்பதற்குள் கட்டிடம் முழுவதும் புகை சூழ தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் காலை 9.30 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இது குறித்து போபால் மாநகராட்சியின் தீயணைப்பு துறை அதிகாரி ராமேஷ்வர் நீல் கூறுகையில், “15-20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தியுள்ளோம். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறோம். ஆவணங்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன” என்று கூறியுள்ளார்.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ பரவியதா? அல்லது யாரேனும் வேண்டும் என்றே தீ வைத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications