இந்தியாவில் ஒரு ‘விதவை கிராமம்’! எங்கே இருக்கிறது தெரியுமா? என்ன கொடுமை சார் இது?

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தான்: இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் என்ற கனவுடன் நடைபோட்டு வருகிறது. அந்த இந்தியாவில்தான் விதவைகள் கிராமம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இங்கே விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?

இந்தியா வரும் 2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்ற இலக்கை மோடி நிர்ணயித்திருக்கிறார். நிலவுக்கு இந்தியர் ஒருவர் போவதற்கு முன் நாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாமல் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

Rajasthan

ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாம் வாழ்வைச் சமாளிப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள் என்ற அந்த உண்மை ஏனோ ஆட்சியாளர்களின் இதயத்தைச் சுடுவதாக இல்லை. நிலவுக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வரும் அதே இந்தியாவில்தான் புத்புரா கிராமமும் இருக்கிறது. இது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கின்ற பின் தங்கிய கிராமம். ஆனால், அங்கிருந்து உலகத்தில் உள்ள அனைத்து தேவைக்காக வேலை பார்த்து வருகிறார்கள் புத்புரா தொழிலாளர்கள்.

கல்குவாரிகளுக்கு பெயர் போன இந்தக் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உழைக்கும் கூலிகளாக வேலைப்பார்த்து வருகிறார்கள். பாறைகளை உடைத்து நொறுக்கும் இந்தக் குவாரிகளிலிருந்து எழும் புழுதிப் புகையால் அந்தத் தொழிலாளிகள் மிகக் கொடிய அனுபவித்து வருகிறார்கள். பாறை மற்றும் ஜல்லிகளை உடைக்கும் போது வெளியேறும் சிகிக்கா தூசிகளைச் சுவாசிப்பதால் இவர்களில் பலர் சிகிகோசிஸ் என்ற நுரையீரல் வியாதிக்கு ஆளாகி, அன்றாடம் உயிரிழந்து வருகின்றன.

ஏழைக் கிராமமான இந்தப் புத்புரா, பணக்கார நாடுகளான ஐரோப்பாவுக்கு கிரானைட் கற்களையும் கருங்கல் பாறைகளையும் ஏற்றுமதி செய்து வருகிறது என்பதுதான் விநோதம். இந்தப் புத்புராவில் மட்டும் சுமார் 33,000க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக இங்கே குவாரிகள் உள்ளன. இவற்றில் 2.5 மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர்.

கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேல் என்று சொல்லலாம். இவர்களில் கணிசமானவர்கள் சிலிகோசிஸ் என்று நுரையீரல் பாதிப்பு நோய்க்கு ஆளாகியுள்ளனர். 2018 முதல் ஜனவரி 19, 2023க்கு இடையில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி சுமார் 31,869 சிலிகோசிஸ் நோயாளிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது வெறும் மாதிரிதான். உண்மையில் முழுமையான ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Rajasthan

ஏனெனில் மருத்துவச் சோதனை படி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டால், நிலை மோசமாக உள்ளது என்பது வெளியே தெரிந்துவிடும். அதை மூடி மறைக்க மருத்துவமனைகளில் சிலிகோசிஸ் பாதிப்பு என்பதை உறுதி செய்ய தயங்குகிறது அரசு.

பூண்டி நகரத்தில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் நிரேந்தர் குமார், ஒவ்வொரு நாளும் ஐம்பது முதல் அறுபது நோயாளிகள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாதிப் பேருக்கு சிலிகோசிஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோன்று உள்ள பல நோயாளிகளுக்கு அன்றாடம் சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்தப்பகுதியில் உள்ள குவாரி தொழிலாளர்களிடையே சிலிகோசிஸ் இறப்பு விகிதங்கள் அதிகமாக இருப்பதால், பத்திரிகைகள் புத்புராவை விதவை கிராமம் என்று அழைத்து வருகின்றனர். ஏனெனில் பல பெண்களின் கணவர்கள் சிலிகோசிஸ் நுரையீரல் நோயால் இறந்துபோய்விட்டனர்.

சுர்பி குமாரின் கணவர் இங்குள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். 2008 இல் சிலிக்கோசிஸ் நோய் முற்றி இறந்துள்ளார். இவரது மாமியாருக்கும் இதே நோய் உள்ளது. மகனின் 2 பிள்ளைகளை வளர்ப்பதற்காக, சுர்பி தொடர்ந்து அதே கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். ஆனால், அவரது உயிர் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் பிழைக்க வேறு வழியின்றி தனது கணவரின் உயிரைப் பறித்த அதே வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர். குவாரி வேலைக்குச் சென்றால் நாளைக்கு சுமார் 350 ரூபாய் கிடைக்கிறது. அந்தப் பணத்திற்காகத்தான் உயிரையே பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள் இந்த விதவை மக்கள்.

பாதிப்பைக் குறைக்க அரசு சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாறைகளில் ட்ரில் எந்திரங்களைக் கொண்டு துளையிடும் போது புழுதி பறப்பதைத் தடுக்க, முதலில் நீரைப் பாய்ச்சிவிட்டு அதன் பின்னர் பணியைத் தொடங்க வேண்டும். அதனால் நுண்ணிய சிலிக்கா தூசி காற்றில் பறப்பதைத் தடுக்க முடியும். ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையம், குவாரிகளில் இந்த நடைமுறை பின்பற்ற அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அந்தக் கோரிக்கை காகித அளவில் மட்டுமே உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், புத்புரா மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகளின் குத்தகையை அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு அஞ்சி சில குவாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு கவசங்களை மற்றும் உபகரணங்களைத் தொழிலாளிகளுக்கு அளித்துள்ளனர். இன்னொரு பக்கம் அரசின் கடும் நடவடிக்கைகளுக்குப் பயந்து நிலத்தை ஈரப்படுத்திய பிறகு துளையிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

Rajasthan

ஆனாலும், பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடவில்லை. அதற்குக் கடுமையான சட்டங்கள் தேவை. அப்படி இல்லை என்றால் என்றால், சிலிக்கோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று புத்புராவின் மருத்துவர் தேவராஜன் ஆனந்த் 'திங் குலோபல் ஹெத்' தளத்திற்கு அளித்த பேட்டியின் மூலம் எச்சரித்துள்ளார்.

2019 முதல், ராஜஸ்தான் அரசு சிலிகோசிஸ் நோயாளிகளுக்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவை பெண்கள் சிலருக்கும் இழப்பீடுகளை அளித்தது. நோயாளிகள் ஒவ்வொருவரும் ரூ. 200,000 இழப்பீடாகப் பெற்று வருகிறார்கள். இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. 300,000 அளிக்கப்படுகிறது. புத்புராவில், கல்குவாரி தொழிலாளர் பாதுகாப்பு பிரச்சார அறக்கட்டளைதான் போராடி சிலிகோசிஸ் நோய் பாதித்து கணவனை இழந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குச் சட்டப் போராட்டம் நடத்திப் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக சில முகாம்களை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+