கட்டாய ஆதார் அட்டையால் தேசபாதுகாப்புக்கு ஆபத்து... சு.சுவாமி புது குண்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கட்டாய ஆதார் அடையாள அட்டையால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

கட்டாய ஆதார் அடையாள எட்டைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Aadhaar a threat to national security, warns Subramanian Swamy

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு இப்படியெல்லாம் வழக்கு தொடரலாமா? என கேள்வியும் எழுப்பியது உச்சநீதிமன்றம். தனிப்பட்ட மமதா பானர்ஜியாக வழக்கு தொடருங்கள் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டாய ஆதார் அடையாள அட்டை முடிவுக்கு ஆளும் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆதார் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைத் தரக் கூடியது. ஆதார் கட்டாயம் எனும் மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bharatiya Janata Party MP Subramanian Swamy said that he will write a letter to Prime Minister Narendra Modi, emphasising on how compulsory Aadhar is a threat to the national security.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற