பஞ்சாப்பில் பாஜகவின் கனவு பொய்த்தது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி.. பகவந்த் மான் ஹேப்பி!
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பணபலத்தால் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் தவிடுபொடுயாகி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் பதவியேற்றார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்
மொத்தம் 117 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 உறுப்பினர்களுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், சில மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது போல பஞ்சாபிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பை கிளப்பியது.

ஆபரேஷன் லோட்டஸ்
ஆபரேஷன் லோட்டசை பாஜக கையில் எடுத்து இருப்பதாகவும் இதற்காக பல கோடி ரூபாயை ஒதுக்கி எம்.எல்.ஏக்களை அணுகியதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது. ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 25 கோடி தருவதாக ஆசை காட்டப்படுவதாகவும் 10 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக அணுகியிருப்பதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் ஆம் ஆத்மி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை காட்டப்போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. இதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி, சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் கையை தூக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இதேபோல கையை தூக்க வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

ஆதரவாக 91 எம்.எல்.ஏக்கள்
முன்னதாக, அவையின் பூஜ்ஜிய நேரத்தில் சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்காமல் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், விவாதம் தொடங்கியதும் அவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 91 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால், ஒருமனதாக நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

கூட்டத்திற்கு அனுமதி மறுத்தார்
அரசியல் அமைப்பு விதிகளை மீறி நம்பிக்கை தீர்மானத்தை அவையில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக, சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்ட சபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக ஆம் ஆத்மி அறிவித்து இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தார்.

கடும் விமர்சனங்களை
இதற்கு ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இதையடுத்து, கடந்த 27 ஆம் தேதி சட்ட சபை கூட்டத்தை கூட்ட ஆம் ஆத்மி அரசு முடிவு செய்தது. விவசாய கழிவு பொருட்கள் எரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த சட்டசபை கூட்டத்தை கூட்டுவதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications