6 மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு பறிபோனது- கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் 6 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளது என்று சி.என்.என்.- லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

ஆம் ஆத்மியின் செல்வாக்கு தொடர்பாக சி.என்.என்.- லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ்., தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கருத்து கணிப்பை நடத்தியது.

இக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள முடிவுகள் விவரம்:

டெல்லியில் செம சரிவு

டெல்லியில் செம சரிவு

டெல்லியில் ஜனவரி மாதம் ஆம் ஆத்மிக்கான ஆதரவு 48% இருந்தது. கடந்த 2 மாதத்தில் இது 35% ஆக குறைந்துபோய்விட்டதாம்.

உ.பி, மகாராஷ்டிராவில் சமநிலை

உ.பி, மகாராஷ்டிராவில் சமநிலை

ஆனால் உத்தப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மியின் ஆதரவு 5% என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

தமிழகத்தில் சரிவு

தமிழகத்தில் சரிவு

பீகார், தமிழகம், ஆந்திர மாநிலத்தில் கணிசமான அளவு ஆம் ஆத்மிக்கு இருந்த செல்வாக்கு சரிந்துள்ளது. பீகார், தமிழகத்தில் 3% ஆதரவு இருந்த ஆம் ஆத்மிக்கு தற்போது 2%தான் ஆதரவு.

ஆந்திராவிலும் அடி

ஆந்திராவிலும் அடி

ஆந்திர மாநிலத்தில் 2% ஆதரவு இருந்தது. இது தற்போது பாதிக்கு பாதியாக குறைந்துபோய் 1% என்ற அளவில்தான் இருக்கிறது.

கேஜ்ரிவால் பிரதமராக..

கேஜ்ரிவால் பிரதமராக..

இந்த 6 மாநிலங்களில் நாட்டின் அடுத்த பிரதமராக கேஜ்ரிவால் வருவதற்கு 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில்..

தமிழகத்தில்..

ஆனாலும் தமிழகத்தில் கேஜ்ரிவால் பிரதமராக எவருமே ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிறது கருத்து கணிப்பு. டெல்லியிலும் கூட கேஜ்ரிவால் பிரதமராக ஜனவரி மாதம் 34% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது பிப்ரவரி மாதம் 26% ஆக குறைந்தும் போய்விட்டது.

மோடிக்குத்தான் அதிக ஆதரவு

மோடிக்குத்தான் அதிக ஆதரவு

கருத்து கணிப்பு நடத்தப்பட்ட 6 மாநிலங்களில் சராசரியாக 39% பேர் மோடி, பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அடுத்து 17% பேர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கும் அடி

பாஜகவுக்கும் அடி

மேலும் 6 மாநிலங்களில் ஜனவரி மாதம் பாஜகவுக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் 12%. இப்போது இது 7% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்த வாக்குகள் பகுஜன் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு திரும்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+