ஆம் ஆத்மி கட்சி ஒரு நீர்குமிழி… முலாயம்சிங் யாதவ் கமெண்ட்

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றி இதுநாள் வரை கருத்துக் கூறாமல் இருந்த முலாயஅ சிங் யாதவ் இப்போதுதான் முதன் முறையாக தனது கருத்தினைக் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற திருமணவிழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ் கட்சியை விரும்பாத வாக்காளர்கள், மூன்றாவதாக ஆம்ஆத்மி கட்சியை தேர்தெடுந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி என்பது வெடிக்கும் நீர்க்குமிழி போன்றது. விரைவில் அது காணாமல் போய்விடும் என்றார்.
ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றி பற்றி கருத்து கூற மறுத்துவிட்ட அகிலேஷ், லோக்சபா தேர்தலில் பொதுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். நாங்கள் எங்களின் செயலை மக்களுக்காக சிறப்பாக செய்து வருகிறோம். மக்கள் அவர்களின் முடிவை லோக்சபா தேர்தலில் தெரிவிப்பார்கள் என்றார்.
டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 27 இடங்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்தது 7 பேர் வெற்றி பெறுவார்கள் என்று அந்த கட்சி சார்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரும் தோல்வி அடைந்தனர். இதேபோல மத்தியபிரதேச மாநிலத்தில் 50 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டதில் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்த கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அந்த மாநில கட்சி கிளைகளை உடனடியாக கலைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications