என்னமோ ஏதோ.. நடிகருடன் காருக்குள்ளேயே காதல்! தேசிய விருது நடிகையை புரட்டி எடுத்த மனைவி! என்னா அடி..!

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் பிரபல நடிகருடன் காருக்குள் தனிமையில் முத்தம் கொடுத்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையை, அந்த நடிகரின் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடும் அப்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் நம்ம ஊர் இளம் நடிகர்கள் போல அங்கு பிரபல இளம் ஹீரோவாக வலம் வருபவர் பாபுஷான் மொகந்தி. இளம் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வரும் அவர் ஒடியா மொழியில் லவ் ஸ்டேஷன், சிஸ்டர் ஸ்ரீதேவி, லோக்கல் டோக்கா லவ் சோக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல ஓடியா மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. ஒடியாவில் வெற்றி பெற்ற பிட்டி பிசினஸ் வாலி, ஹலோ அர்சி, மித்தாமித்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரக்ருதி மிஸ்ரா

பிரக்ருதி மிஸ்ரா

2006 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஒடிசா மாநில விருதையும், ஹலோ அர்சி படத்திற்கான சிறப்பு பட்டியலில் 2018 ஆம் ஆண்டு தேசிய விருதையும், ஓடிஸா இசை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் கிளாஸ் ஆஃப் 2020 என்ற வெப் தொடரிலும், துளசி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கலிங்கா, ராஜா குயின், லால் இஸ்க் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

முறையற்ற உறவு

முறையற்ற உறவு

இந்த நிலையில் நடிகை பிரக்ருதி மிஸ்ராவுக்கும் நடிகர் பாபு சன் முஹந்திக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாநில பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகை பிரகதி மிஸ்ராவை நடிகர் பாபுசன் மொஹந்தியின் மனைவி அடித்து துவைத்த காட்சிகள் தான் இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது.

 மனைவி தாக்குதல்

மனைவி தாக்குதல்

சம்பவம் நடந்த அன்று நடிகர் பாபுசன் நடிகை ப்ரக்ருதி உடன் காரில் சென்று கொண்டிருப்பதாக அவரது மனைவி த்ருப்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் நகரில் கார் நின்றிருந்த இடத்துக்கு வந்த பாபுசன் மொகந்தியின் மனைவி த்ருபதி, காருக்குள் இருந்த பிரக்ருதி மிஸ்ராவை வெளியே இழுத்துபோட்டு தாக்கினார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோதும் பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை த்ருபதி இழுத்து போட்டு அடித்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இருந்தும் அவரது பிடியில் இருந்து தப்பித்து, அருகில் நின்றிருந்த ஆட்டோ ரிக்ஷாவில் பிரக்ருதி மிஸ்ரா ஏற முயன்றார். அப்போதும் விடாமல் துரத்திய த்ருபதி, அவரை அங்கிருந்து விரட்டினார். அப்போது என் குடும்பத்தை பிரக்ருதி மிஸ்ரா அழித்து விட்டார் என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் காரவேலா நகர் காவல் நிலையத்தில், நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தாய் கிருஷ்ணப்ரியா மிஸ்ரா, தனது மகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக த்ருபதி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+