வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்... தீர்க்க தரிசிதான் போங்க இந்த திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடித்த வெல்கம் டூ ஜெயில் படத்தின் டைட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திலீப் நடித்த படத்தின் தலைப்பு அவரது நிஜ வாழ்க்கையிலும் பொருந்திவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

காவ்யா மாதவனுடனான தனது கள்ளக்காதலை மனைவி மஞ்சு வாரியரிடம் அவரது நெருங்கிய தோழியான பாவனா தெரிவித்தார். இந்த விவகாரம் திலீப் - மஞ்சுவாரியர் வாழ்க்கையை விவாகரத்தில் போய் நிறுத்தியது.

இதனால் பாவனா மீது கொலை வெறியில் இருந்த திலீப் அவரை பழிவாங்க துடித்தார். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவு செய்து பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்க ஏற்பாடு செய்தார்.

திலீப்புக்கு கஸ்டடி

திலீப்புக்கு கஸ்டடி

இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெல்கம் டூ ஜெயில்

வெல்கம் டூ ஜெயில்

இந்நிலையில் திலீப் கடந்த ஆண்டு நடித்து வெளியான வெல்கம் டூ ஜெயில் திரைப்படத்தின் டைட்டில் தற்போது அவரது வாழ்க்கையில் ஒத்துப்போவதாக தகவல் பரவி வருகிறது. தான் நடித்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப அவர் தற்போது உள்ளே சென்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தொடர் சரிவுகள்

தொடர் சரிவுகள்

இந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படமும் சரியாக போகவில்லை. மனைவி மஞ்சு வாரியருடன் பிரச்சனை, விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை, காவ்யா மாதவனுடன் திருமணம், பல்சர் சுனிலுடன் பழக்கம், பாவனா கடத்தல் வழக்கில் தொடர்பு என பெரும்பாலும் தனது வாழ்வில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

நேரம் சரியில்லை என்றால்..

நேரம் சரியில்லை என்றால்..

கடைசியாக படத்தின் தலைப்புக்கு ஏற்பட சிறைக்கும் சென்றுவிட்டார். எதார்த்தமாக அமைந்த படத்தின் பெயர் திலீப் வாழ்க்கையில் தற்போது நிஜமாகிவிட்டது. நேரம் சரியில்லை என்றால் எல்லாம் இப்படித்தான் நடக்கும் போல..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Dhileep has acted in the movie named Welcome to Jail. This movie tittle becomes true in his life. He is Jail now.
Please Wait while comments are loading...