Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்.. குருதாஸ்பூரில் போட்டியிட வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

அமிருதசரஸ்: நடிகர் சன்னி தியோல் பாஜகவில் இணைந்ததன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நடிகர் சன்னி தியோல் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவார் என்றும் அவர் எந்த கட்சியில் இணைவார் என்ற விவாதம் நடைபெற்றது. இந்த நேரத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி புனே விமான நிலையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவை சன்னி தியோல் சந்தித்து பேசியது யூகங்களுக்கு இன்னும் தீனி போட்டது போல் இருந்தது.

Actor Sunny deol joins BJP today

இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இன்று பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

பஞ்சாபில் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநில கட்சியான சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாஜக அமிருதசரஸ், குருதாஸ்பூர் மற்றும் ஷோஷியார்பூர் ஆகிய 3 எம்பி தொகுதிகளில் போட்டியிடுகிறது.

எனவே குருதாஸ்பூரில் சன்னி தியோல் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. குருதாஸ்பூர் மறைந்த நடிகர் வினோத் கண்ணாவின் தொகுதியாகும். சன்னிதியோல் நடிகர் தர்மேந்திராவின் மகன். 2004-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் பிகானெரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+