அரசியல் களத்துக்கே வராத ரஜினி- கமல்; விசில் சின்னத்துக்காக இப்போதே பஞ்சாயத்துக்கு ரெடியாகும் டெல்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசியல் களத்துக்கே வராத ரஜினி- கமல்...வீடியோ

டெல்லி: அரசியல் களத்துக்கு இன்னமும் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் வராத நிலையில் திரைமறைவில் இருவருமே விசில் சின்னத்துக்காக மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டனர். இந்த பஞ்சாயத்துக்கு டெல்லியும் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை... போர் வரும்போது பார்த்து கொள்வோம் என அரசியலுக்கு வருவதை அறிவித்தார். உடனே கமல்ஹாசனும் நான் எப்போதே சிஸ்டம் சரியில்லை என சொன்னவன்; எப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார்.

அத்துடன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் விறுவிறுவென தீவிர அரசியலை முன்னெடுத்தார். ஆனால் ரஜினிகாந்தோ அமைதிகாக்கத் தொடங்கினார்.

ரஜினி பதிலடி

ரஜினி பதிலடி

திமுக முரசொலி பவளவிழாவில் பேசிய கமல்ஹாசன், தற்காப்புக்கான அரசியல் கூடாது என ரஜினிகாந்தைச் சாடினார். இதற்கு சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெற என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியாது; அதை எனக்கு கமல்ஹாசன் சொல்லவும் மறுத்து என்னோடு வா என்கிறார் என்றார்.

டிச.12-ல் ரஜினி கட்சி

டிச.12-ல் ரஜினி கட்சி

இருவருமே விரைவில் கட்சித் தொடங்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், பத்திரிகைகள் அவசரத்துக்கு கட்சி பெயரை அறிவிக்க முடியாது என்றார் கமல்ஹாசன். ஆனால் ரஜினிகாந்தோ அடுத்த மாதம் 12-ந் தேதி கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஜினியும் மல்லுக்கட்டு

ரஜினியும் மல்லுக்கட்டு

இதனிடையே மையம் விசில் என்கிற ஆப்பை வெளியிட்டு தமது சின்னம் விசில் என பிரகடனம் செய்திருக்கிறார். இதற்கு முன்னரே ரஜினிக்காக வரிந்துகட்டிய தமிழருவிமணியன் ரஜினியின் சின்னமாக விசில் இருக்கும் என்றார். இப்போது விசில் சின்னத்தைப் பெறுவது ரஜினியா? கமல்ஹாசனா? என்கிற போட்டி இருக்கிறது.

பஞ்சாயத்துக்கு ரெடி

பஞ்சாயத்துக்கு ரெடி

இத்தகவல் டெல்லி பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வாய்ப்பு... இரட்டை இலை சின்னத்தை முன்வைத்து அதிமுக அணியை வளைத்தது போல நடிகர்கள் இருவரின் விசில் சின்ன பஞ்சாயத்தில் தலையிட்டு ஒருவரை அமுக்கிவிடலாம் என சொம்புடன் கட்ட பஞ்சாயத்துக்கு ரெடியாக காத்திருக்கிறதாம் டெல்லி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Actors Rajinikanth and Kamal Haasan are fighting for the whistle symbol.
Please Wait while comments are loading...