பிரபல நடிகையின் மார்பிலேயே சுட்ட கொடுமை.. அலறி விழுந்து இறந்து.. "குறி" வைத்தது யார்? ஏன்..!
நடிகையை காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீரென சுட்டுக் கொன்றுள்ளனர்
ஸ்ரீநகர்: ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த நடிகையை, தீவிரவாதிகள் திடீரென சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்..
அந்த வகையில், காஷ்மீரில் எல்லை பகுதிகளில், ஆங்காங்கே பிரிந்து சென்று, இந்த தீவிரவாத குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

துவம்சம்
கடந்த ஒரு வார காலமாகவே அங்கு மோசமான சூழல் நிலவி வருகிறது.. வீடுகளை துவம்சம் செய்து வருகின்றனர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான், போலீஸ் கான்ஸ்டபிளை சுட்டுவிட்டார்கள்.. அதுவும் அவரது 7 வயது மகன் கண்முன்னாடியே சுட்டுக் கொன்றுவிட்டனர்.. இப்போது ஒரு நடிகை கொல்லப்பட்டுள்ளார்..

நடிகை பலி
காஷ்மீரை சேர்ந்தவர் இந்த நடிகை.. சீரியலில் இவர் மிகவும் பிரபலம்.. குறிப்பாக டிக்டாக்கில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்.. அம்ரின் பட் என்பது இவரது பெயர்.. 34 வயதாகிறது.. பூத்காம் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.. இவர் தன்னுடைய 10 வயது அண்ணன் மகனுடன் வீட்டுக்கு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.. கண்மூடித்தனமாக சுட்டதில், 10 வயது சிறுவன் பர்ஹான் ஜுபைர் கையில் குண்டு பாய்ந்தது...

சிகிச்சை
அருகில் இருந்த நடிகை அம்ரின் பட் நெஞ்சிலும் குண்டு பாய்ந்தது.. இருவருமே அங்கு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.. அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுதித்தனர்.. ஆனால் நடிகையை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக உயிரிழந்தார்.. சிறுவனுக்கு மட்டும் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. நடிகையின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்...

ஆழ்ந்த இரங்கல்கள்
அதேபோல, இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க போதிய வார்த்தைகள் இல்லை... அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மருமகன் விரைந்து குணமடைய வேண்டி கொள்கிறேன் என்று தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார்.

நடிகை மீது குறி ஏன்?
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தன்னுடைய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. 3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்ரின் பட் இறந்ததாகவும் சம்பந்தப்பட்ட அந்த தீவிரவாதிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்... எனினும், நடிகையை ஏன் இவர்கள் குறி வைத்து கொன்றார்கள் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications