ஹைதராபாத் ஏர்போர்ட்டில் வெடித்த இண்டிகோ விமான டயர்.. கிளம்பிய தீ.. ரோஜா உள்ளிட்ட பயணிகள் தப்பினர்
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்க முயற்சித்தபோது டயர் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த விபத்தில் நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், நேற்று இரவு 8.55 மணிக்கு, திருப்பதியில் இருந்து, ஹைதராபாத் செல்லும் இண்டிகோ - 6E 7117 விமானத்தில் பயணித்தார்.

விமானம், இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்தது. இதனால், டயர் வெடித்த இடத்தில் இருந்து நெருப்பு வெளியேறியது
இதையடுத்து பயணிகள் பதற்றமடைந்தனர். ஆயினும் விமான நிலையத்திற்கு அவசர தகவல் அனுப்பப்பட்டு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
நெருப்பை அணைத்து, அனைத்து பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக கீழே இறக்கினர்.
இதனால் விமானத்தில் இருந்த நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் உயிர்தப்பினர். விபத்து காரணமாக ஓடுதளம் மூடப்பட்டதையடுத்து 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications