நகரி சட்டசபை தேர்தல் - வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கதறி அழுத நடிகை ரோஜா
நகரி: நகரியில் தன்னுடைய வெற்றி அறிவிப்பைக் கேட்டவுடன் நடிகை ரோஜா கதறி அழுததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடுவை விட 858 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.

வித்தியாசம் குறைவாக இருந்தாலும் வெற்றி பெற்றதே பெரிய சாதனை என ரோஜா கருதினார்.வெற்றி சான்றிதழை பெற்றதும் அவர் உணர்ச்சி பெருக்கில் ‘ஓ' என்று கதறி அழுதார்.
கூடிநின்ற நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் நிதானம் அடைந்த நடிகை ரோஜா நிருபர்களிடம் பேசியபோது,
"30 ஆண்டு கால அரசியல் சாணக்கியர்களாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் இந்திரா பிரியதர்சினியின் தந்தை சென்னா ரெட்டி, தெலுங்கு தேச வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடு ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன் என்பதை விட யுத்தம் செய்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன்.
2 முறை நான் தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட போது சொந்த கட்சிக்காரர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இன்று அதே தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கட்சியினரும் சேர்த்து என்னை தோற்கடிக்க சதி செய்தார்கள். அதையும் மீறி நான் வெற்றி பெற்றது சாதனையாக கருதுகிறேன்.
நான் நல்ல நடிகையாக இருந்துள்ளேன். சிறந்த குடும்ப தலைவியாக, கணவருக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து உள்ளேன். ஆனால் அரசியலில் மட்டும் எனக்கு தோல்வியே கிடைத்து வந்தது. இன்று அதிலும் சாதனை படைத்து விட்டேன்.
நகரி மக்களுக்காக என வாழ் நாளை அர்ப்பணிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கை நிறைவேற போராடுவேன்" என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications