ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி ஜெ. தரப்பு வாதிடாதது ஏன்? சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சாரியா கேள்வி
டெல்லி: ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளில் ஏதாவது ஒன்றை விசாரித்தால் கூட, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி என்று கர்நாடக தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா வாதிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதங்களை தொடர்ந்தார்.

ஆச்சாரியா வாதம்
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு பதில் வாதங்களை 2வது சுற்றாக முன்வைக்குமாறு கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யாவை நீதிபதிகள் அழைத்தனர்.

ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி பேசவில்லை
அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது: கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளை சுட்டிக்காட்டினோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஹைகோர்ட்டு தீர்ப்பை பற்றி ஒரு வார்த்தை கூட எங்கும் கூறவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை பற்றி மட்டுமே குறைகூறி வந்தனர்.

தண்டனை உறுதி
ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளில் ஏதாவது ஒன்றை விசாரித்தால் கூட, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி. ஹைகோர்ட் தீர்ப்பில் கணக்குப் பிழை உள்ளிட்ட எந்த குறையை பற்றியும் அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூற முன்வரவில்லை. ஹைகோர்ட்டு தீர்ப்பை சரியானது என்று அவர்கள் எங்கும் கூறவில்லை. இதில் இருந்தே ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு உள்ளது என்பது தெரியவருகிறது.

குளறுபடிகள்
கர்நாடக ஹைகோர்ட்டு தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளன. ரூ.24 கோடி கடன் தொகையை வருவாயாக தீர்ப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்பே ஹைகோர்ட்டில் எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்கப்பட்டது.

எழுத்து மட்டுமே
ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் எங்களால் விரிவான முறையில் வாதத்தை முன்வைக்க முடியவில்லை. அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதையும்கூட, ஹைகோர்ட்டு தன்னுடைய தீர்ப்பில் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

குறுக்கிட்ட நீதிபதிகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க தொடங்கிய போதே நீங்கள் ஹைகோர்ட்டு தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியிருக்கலாமே என்று கேட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே நாங்கள் சொன்னதுபோல இந்த வழக்கு முற்றிலும் வித்தியாசமானது. அதனால் தான் இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் விரிவான வாதத்தை முன்வைக்க தேவையான காலம் வழங்கப்படுகிறது என்று கூறினர்.
விசாரணை இன்றும் தொடருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications