பள்ளிகளுக்கு அருகே “ஜங்க்” உணவுகள் விற்க தடை... எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கோரிக்கை
டெல்லி: நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை பள்ளிகளுக்கு அருகில் விற்பதற்கு தடை விதிக்கும் திட்டத்தை இந்திய உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் முன்வைத்துள்ளது.
நாடு முழுதும், பள்ளிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் "ஜங்க்" உணவுகள் விற்பதை தடுக்கும் விதிமுறைகளை மூன்று மாத காலத்தில் வகுக்குமாறு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதிக உப்பு, கொழுப்பு, சர்க்கரை கொண்ட உணவுகள் சிறுவர்களின் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
எனவே இது போன்ற உணவுகளை சிறுவர்கள் உண்ணாமல் தடுக்கும் வகையில் பள்ளிகளிலும் அவற்றின் அருகிலும் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற வரைவு விதியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இவ்விதிமுறைகளை உணவு ஆணையம் உருவாக்கியுள்ளது.
டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி ஜங்க் உணவு வகைகள் பள்ளிகளில் விற்கப்படுவதை தடுக்கும் நெறிமுறைகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தயாரித்து விட்டதால் அடுத்த கட்டமாக இத்தடை விரைவில் நாடு முழுதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications