For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை வழங்கியது இத்தாலி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சத்திடம் இத்தாலி வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.3,600 கோடி மதிப்பில் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்கு உதவும் நோக்கத்தில், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இத்தாலி வழங்கியுள்ளது. மிலன் நீதிமன்றத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணை அண்மையில் நடைபெற்றது.

அப்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விசாரணைக்கு, தங்கள் நாட்டிடம் உள்ள முக்கிய ஆவணங்களை வழங்க இத்தாலி சட்டத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதனடிப்படையில், அந்த ஆவணங்களை இந்தியப் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளிடம் இத்தாலி சட்டத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

English summary
Law authorities in Italy are understood to have allowed Defence Ministry to use the documents supplied by them in the legal process here against the Rs 3,600 crore AgustaWestland chopper deal, which is facing cancellation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X