ஏர் இந்தியா விமானம் விழுந்தது எப்படி? விசாரணையை தொடங்கிய AAIB.. யாரு இவங்க? பின்னணி
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் பலியாகினர். இந்த விமானம் விபத்து விமான விபத்து புலனாய்வு முகமை (AAIB) சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 241 ஆக உள்ளது. தற்போது வரை 200க்கும் அதிகமானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சம்பவ இடத்துக்கு சென்றார். விபத்து பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தனது எக்ஸ் பகப்கத்தில், ‛‛ அகமதாபாத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச நெறிமுறைகளின்படி விமான விபத்து புலனாய்வு முகமை (AAIB) சார்பில் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விபத்து பற்றி விரிவாக ஆராய பல துறைகளை சேர்ந்த நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்து வருகிறது. விமான பாதுகாப்பை வலுப்படுத்தவும், வரும் காலத்ில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இந்த குழு செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விமான விபத்து புலனாய்வு முகமை (Aircraft Accident Investigation Bureau) சுருக்கமாக AAIB என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய விமான போக்குவரத்து துறையின் ஒரு டிவிஷனாகும். இது விமான விபத்துகள் பற்றி விசாரணை மேற்கொள்ளும் அமைப்பாகும். இதன் தலைமை அலுவலகம் உதான் பவானில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications