ஆந்திராவில் அதிரடி.. ஜெகன் மோகன் அமைச்சரவை கூண்டுடோடு ராஜினாமா.. மொத்தமாக மாற்றும் முதல்வர்
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்கின்றனர்.
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ஜெகமோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. 150 தொகுதிகளை கைப்பற்றியது அக்கட்சி.
ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா முக்கிய இலாக்காவை பெறுவார் என்றும், துணை முதலவராக நியமிக்கப்படுவார் என்றும் அப்போது பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால் ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில், 3 ஆண்டுகள் நெருங்குவதால், அமைச்சர்களை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உட்பட பலரை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள், நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து விவாதித்தார்.

ஆளுநருடன் ஜெகன்மோகன் ஆலோசனை
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஜெகன், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் 11ஆம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஜெகன் மோகன் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர்கள் ராஜினாமா
அமராவதியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வரும் 11ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.

ரோஜாவுக்கு வாய்ப்பு
கடந்த 2019ஆண்டில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றபோதே இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் என ஜெகன் மோகன் அறிவித்திருந்தார் அதன்படி இன்றைய தினம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து செய்துள்ளனர். புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அதன்படி, சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications