ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளுடன் சந்திப்பு- சிபிஐ இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை சந்தித்தது தொடர்பாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா பலமுறை சந்தித்து பேசினார் என்பது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இம் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா, பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டுக்கு ஒருவாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேர்மையாக நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம். இந்த வழக்கு நடைபெற்று வரும் நேரத்தில் பிராசந்த் பூஷன் மற்றும் ஜெய்ஸ்வாலின் புகார்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
அத்துடன் ரஞ்சித் சின்க யார் யாரை சந்தித்ர் என்ற வருகை பதிவேடும் உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications