For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: மூடப்பட்ட நெடுஞ்சாலை- அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால், 300 கிமீட்டர் நீளமுள்ள அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை நேற்றிரவு மூடப்பட்டது. இதனையடுத்து அமர்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Amarnath Yatra suspended due to heavy rains, National Highway closed

தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால், 300 கிமீட்டர் நீளமுள்ள அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை நேற்றிரவு மூடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.

நிலச்சரிவு

நிலச்சரிவால் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீர் செய்யும் பணிகளில் எல்லைப்புற சாலைகள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனால், இன்று மாலை மீண்டும் போக்குவரத்துக்காக சாலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமர்நாத் யாத்திரை

கனமழை காரணமாக ஜம்மு முகாமில் அமர்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் யாத்ரீகர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பிய உடன் பக்தர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

200 ஆண்டுகால மழை

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு மிககடுமையான மழை வெள்ளத்தால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு பாதிப்பு

பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி

60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

English summary
Incessant rainfall at several places in the state on Sunday forced authorities to suspend the pilgrimage to the cave shrine of Amarnath in south Kashmir Himalayas and also led to closure of the Srinagar-Jammu National Highway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X