For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய தேசிய கொடி அவமதிப்பு.. சுஷ்மா எச்சரிக்கையை தொடர்ந்து மன்னிப்பு கேட்டது அமேசான்

இந்திய தேசிய கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா எதிர்ப்பை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Amazon apologizes to Indian flag doormats on their website

இதையடுத்து இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமேசான் நிறுவனத்துக்கு டிவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன் பின்னர் அமேசான் நிறுவனம், அந்த மிதியடிகள் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்தது. இந்நிலையில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜூக்கு அமேசான் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளது.

English summary
The Amazon on Thursday apologised to the External Affairs Minister Sushma Swaraj for hurting the patriotic sentiments of the people by selling a doormats printed with the Indian flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X