1962-ன்னு நினைச்சியளா? மோடி.. அமித்ஷா காலம்லே.. பொளந்துருவோம்.. சீனாவை எச்சரித்த அருணாச்சல் சிஎம்!
இடாநகர்: 1962-ம் ஆண்டு போல இந்தியா கோட்டைவிடாது; தற்போது இந்தியாவின் பிரதமராக மோடியும் உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என சீனாவை எச்சரித்துள்ளார் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு.
Recommended Video

இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் அருணாச்சல பிரதேசம். இந்தியாவின் எல்லைப் பகுதி. ஆனால் சீனாவோ அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதி அவ்வப்போது உரிமை கோருகிறது. அருணாச்சல பிரதேசத்துக்கு சீன மொழியில் வேறு ஒரு பெயரை சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கும் கூட சீன மொழியில் வேறு பெயர்களை வைத்திருக்கிறது சீனா.

நாட்டின் தலைவர்கள், அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சென்றுவிட்டாலே சீனாவுக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் சீனா அலறுவதும் பின்னர் மூக்குடைபட்டு அமைதி காப்பதும் வாடிக்கையாகிவிடுகிறது.
ஆனாலும் சீனா அருணாச்சல பிரதேச எல்லைகளில் குடியேற்றங்களை அமைத்து தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்திய கிராமங்களில் இருந்து குடிமக்களை கடத்திச் சென்று சித்ரவதை செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறது சீனா. அண்மையில் கூட சீனா, அருணாச்சல் பிரதேசத்தின் பல பகுதிகளின் பெயரை மாற்றியது. இதனை மத்திய அரசு வன்மையாகக் கண்டித்தது.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். உடனே சீனா அலறலுடன் அமித்ஷாவின் பயணத்தை எதிர்த்தது. இதனை இந்தியா வழக்கம் போல நிராகரித்தது.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, இந்தியா ஒன்றும் 1962-ம் ஆண்டு காலத்திலேயே இல்லை. இப்போது பிரதமராக மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியில் இருக்கின்றனர். ஆகையால் சீனா எச்சரிக்கையாக இருப்பது நல்லது என கூறியிருக்கிறார்.
1962-ல் என்ன நடந்தது?: வரலாற்றில் இந்தோ-சீனா யுத்தம் அல்லது இந்தியா- சீனா யுத்தம் என அழைக்கப்படுவது 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போர்தான். திபெத் விவகாரத்தை முன்வைத்து இந்த யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் இந்தியா 38,000 சதுரகிலோ மீட்டர் நிலத்தை சீனாவிடம் பறிகொடுத்தது. இந்த நிலம்தான் சீனா ஆக்கிரமிப்பில் உள்ள அக்ஷாய் சின் என அழைக்கப்படுகிறது. அத்தகைய நிலைமை இனி ஏற்படாது என்பதைத்தான் பெமா காண்டு எச்சரிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications