பவானிசிங்கை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்..நடந்தது என்ன?
டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணை முழுவதும் முடிந்த நிலையில், வரும் 15ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு தேதியை வெளியிடுவதில் மீடியாக்கள் குழப்பமடைந்தன. இதற்கு காரணம் உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது.
பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டும் திமுகவின் அன்பழகன், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார்.
இன்று இறுதிவாதம் நடந்தது. நீதிபதிகள் மதன்லோகுர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "பவானிசிங்கை மேல்முறையீட்டு விசாரணையின்போது அரசு வக்கீலாக ஆஜராக கர்நாடக அரசு நியமிக்கவில்லை" என்றார்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அந்தியார்ஜுனா, "பவானிசிங்கை, இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே கூறிவிட்டதால், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, மேல்முறையீட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதிகள், சாப்பாட்டு இடைவேளைக்காக கிளம்பி சென்றனர்.
இதன்பிறகு, நீதிபதிகள், இருதரப்பையும், தங்களது சேம்பருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்புமே, நீதிபதிகள் எதற்காக அழைக்கிறார்கள் என்ற குழப்பத்திலேயே சென்றுள்ளனர். அப்போது, பவானிசிங் வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 15ல் அறிவிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்பழகன் தரப்பு கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு வழங்கும் 15ம் தேதிவரை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4பேரின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவேதான், முதலில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்ட மீடியாக்கள், அதை மாற்றி, 15ம்தேதி தீர்ப்பு என்று வெளியிட வேண்டியதாயிற்று.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications