அந்தமான் 21 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. நேரடியாக தலையிட்ட அமித்ஷா! ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை
போர்ட் பிளேயர்: 21 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பாலியல் குற்றங்கள் சமீக காலங்களில் அதிகரித்து உள்ளதாகவே கூறப்படுகிறது.
பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களை எல்லை மீறும் கொடூரமும் அரங்கேறுகிறது.

அந்தமான்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் சமீபத்தில் அந்தமான் தீவுகளில் சமீபத்தில் அரங்கேறி இருந்தது. அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் தன்னை அரசு முக்கிய அதிகாரிகள் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்து இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் மற்றும் அந்தமான் தீவுகளில் தொழிலாளர் ஆணையரான ஆர்எல் ரிஷி ஆகியோர் மீது அந்தப் பெண் புகார் அளித்து இருந்தார்.

கூட்டுப் பலாத்காரம்
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரில், "எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் ஆணையர் ஆர்.எல்.ரிஷி ஐஏஎஸ் அதிகாரி நரேனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மதுக் குடி கட்டாயப்படுத்தினர். அதற்கு நான் மறுத்த நிலையில், கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரு வாரத்திற்குப் பின் மீண்டும், பலாத்காரம் செய்தனர். அரசு வேலை வாங்கி தர மறுத்த அவர்கள், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டினர்" என்று அவர் கூறி இருந்தார்.

அதிரடி ஆக்ஷன்
இந்தச் சம்பவம் நடந்த போது அந்தமானின் தலைமைச் செயலாளராக ஜிதேந்திர நரேன் இருந்து உள்ளார். இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து இருந்தார். மேலும், இது தொடர்பாக அவர் பிரதமர் அலுவலகத்திற்கும் விளக்கம் அளித்து இருந்தார். இந்தச் சூழலில் அதிரடி நடவடிக்கையாகக் கூட்டுப் பலாத்கார குற்றச்சாட்டிற்கு உள்ளான ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இடைநீக்கம்
நரேன் இப்போது டெல்லி நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு அறிக்கையில், "அந்தமான் தீவுகளின் தலைமைச் செயலராக இருந்த ஜிதேந்திர நரேன் ஐஏஎஸ் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அக்டோபர் 16இல் உள் துறை அமைச்சகம் அறிக்கை பெற்றது.

உள் துறை அமைச்சர்
ஜிதேந்திர நரேன் தனது அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, ஜிதேந்திர நரேன் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.. மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரியும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.

புகார்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அந்தப் பெண் நரேனின் அந்தமான் இல்லத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்,
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications