ஜெகன் மோகனின் "வார்டு செயலகம்" "வீடு தேடி" அரசு சேவைகள்- மாஸ் திட்டம்- வெலவெலத்த எதிர்க்கட்சிகள்!
அமராவதி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்தி வரும் வார்டு செயலகங்கள் மூலம் அனைத்து அரசு சேவைகளையும் வீடு வீடாக வழங்கும் திட்டம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளின் வயிற்றில் டன் கணக்கில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.
ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் இப்போதே தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் அனைத்து இடங்களையும் அள்ளும் என்கிற கருத்து கணிப்பு முடிவு கூடுதல் அனலை கிளப்பிவிட்டிருக்கிறது.

இதனிடையே ஆந்திராவில் எதிர்க்கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பவண் கல்யாணின் ஜேஎஸ்பி, பாஜக ஆகியவற்றை அலறவிடும் வகையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வார்டு செயலகங்கள் மூலம் அனைத்து அரசு சேவைகளையும் இலவசமாக வீடு தேடி வழங்கும் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறார்.
ஆந்திராவில் 11,158 கிராம செயலகங்கள்; 3,809 வார்டு செயல்கங்களை 110 உள்ளாட்சி அமைப்புகளில் உருவாக்கி இருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இந்த வார்டு செயலகங்களின் கீழ் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு கிராமமாக சென்று வீடுகள் தோறும் அரசு வழங்கக் கூடிய அடிப்படையான 32 வசதிகள் அந்த வீடுகளுக்கு கிடைக்க வகை செய்வதுதான் இந்த தன்னார்வலர்களின் பணி. பிறப்பு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை என அரசு திட்டங்களை, சேவைகளை நேரடியாக பொதுமக்களிடம் சென்று வழங்கும் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு தன்னார்வலருக்கும் கிராம்ங்களில் 50 வீடுகளும் நகரங்களில் 100 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான அரசு சேவைகள், திட்டங்கள் சென்றடவதை இந்த தன்னார்வலர்கள் உறுதி செய்வர். அப்படி சிறப்பாக செயல்படுகிற தன்னார்வலர்களுக்கு விருதுகளையும் வழங்குகிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இந்த தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ5,000 ஊதியமும் அரசு வழங்குகிறது. இத்தகைய மாஸ் திட்டத்தால்தான் ஆந்திரா எதிர்க்கட்சிகள் மிரண்டு போயுள்ளன. அத்துடன் கிராம, வார்டு செயலகங்கள் குற்ற செயல்களுக்கு துணை போவதாகவும் புகார் கூறி வருகின்றன. இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் வீடு தேடி மக்களை அரசு சேவைகளை, திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி படுதீவிரமாக இருக்கிறார்.
அசைக்க முடியாது! ஜெகனை அசைக்கவே முடியாது?
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications