1 டன் மீன், 1000 கி காய்கறிகள், 200 கி இறால்.. நீளும் லிஸ்ட்.. ஆந்திராவில் மாமனாரின் ஆடி சீர்வரிசை!
அமராவதி: புதிதாக திருமணமான மகளுக்கு 1000 கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 1000 கிலோ காய்கறிகள், 250 கிலோ இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றை வண்டி வண்டியாக சீர்வரிசையாக கொடுத்த ஆந்திராவை சேர்ந்த நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாக புதுமணத் தம்பதிகளுக்கு தீபாவளி, பொங்கல், ஆடி மாதம் என சீர் கொடுப்பது பெண் வீட்டாரின் வழக்கம். அவரவர் வசதிக்கேற்ப இந்த சீர் வரிசை பொருட்களின் எண்ணிக்கை இருக்கும்.
ஆடி மாதத்தை தெலுங்கு பேசும் மக்கள் ஆஷாதா மாதம் என அழைக்கிறார்கள். இந்த தினத்தையொட்டி புதுமண தம்பதிக்கு பெண் வீட்டார் சீர் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர எல்லையில்
இந்த விழா ஆந்திர எல்லையில் உள்ள ஏனாம் பகுதியிலும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவையொட்டி ஏனாமைச் சேர்ந்த பவண்குமார் என்பவருக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியை சேர்ந்த பத்துலா பலராம கிருஷ்ணா சீர் செய்துள்ளார்.

மகள் பவண்குமார்
பத்துலாவின் மகள் பிரதியுஷாவை பவண்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் கடந்த மாதம் 21 ஆம் தேதி நிகழ்ந்தது. இதனால் மகளுக்காக பத்துலா வண்டி வண்டியாக சீர் அனுப்பியுள்ளார்.

1000 கிலோ காய்கறிகள்
அதில் 1000 கிலோ மீன், 1000 கிலோ காய்கறிகள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், 250 கிலோ மளிகை பொருட்கள், 250 வகையான ஊறுகாய், 50 வகையான இனிப்பு பொருட்கள் என பலவிதமான பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று மருமகன் வீட்டில் கொடுத்துள்ளார்.

சம்பவம்
இந்த பொருட்களை பார்த்துவிட்டு தொழிலதிபரான மாப்பிள்ளை வீட்டாரே அசந்து விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். கோடி கோடியாக வரதட்சணை கொடுத்தாலும் பெண்ணிடம் மேலும் மேலும் வரதட்சணை கேட்கும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.

சீர்வரிசை
எனவே வரதட்சணை, சீர்வரிசை உள்ளிட்டவைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் இது போல் வண்டி வண்டியாக சீர் வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications