விளைச்சலை பார்த்து கண்ணு வைக்குறாங்கப்பா... சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!

  நெல்லூர் : விளைச்சல் நிலத்தை பார்த்து மற்றவர்கள் கண் வைக்கிறார்கள் என்பதால் ஆந்திர விவசாயி தன்னுடைய நிலத்தின் அருகே சன்னி லியோனின் பிகினி போட்டோவை ப்ளெக்ஸ் பேனராக வைத்துள்ளார். இப்போது விவசாயியின் நிலத்தை கடப்பவர்களின் பார்வை விளை நிலத்திற்கு போகாமல் சன்னி லியோன் பக்கம் திரும்புவதால் திருஷ்டி கழிப்பதற்காக விவசாயி இப்படி ஒரு ஐடியாவை செய்துள்ளாராம்.

  ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 45 வயது விவசாயி சென்சு ரெட்டி. பண்டா கிண்டி பல்லே கிராமத்தை சேர்ந்த இவர் தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளார்.

  இவை தற்போது நல்ல விளைச்சல் பருவத்தை அடைந்து தழைத்து நிற்பதால் தன்னுடைய நிலத்தை கடந்து செல்வோரின் கண்பட்டு வருவதாக கவலைப்பட்டுள்ளார். விவசாயத்தின் மீது மட்டுமல்ல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் தீவிர ரசிகருமான இவருக்கு அப்போது தான் ஒரு ஐடியா வந்துள்ளது.

  சன்னியின் பிகினி போட்டோ ப்ளெக்ஸ்

  சன்னியின் பிகினி போட்டோ ப்ளெக்ஸ்

  சன்னி லியோன் சிவப்புநிற பிகினியில் இருக்கும் போட்டோவை தனது விளை நிலத்திற்கு அருகில் ப்ளெக்ஸ் பேனராக வைத்துள்ளார். அதில் ஒரு வாசகமும் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. ஏன்யா என்னைப் பார்த்து கதறாதீங்க, பொறாமைப்படாதீங்க என்பது தான் அதன் அர்த்தமாம்.

  திருஷ்டிக்கா விவசாயி செய்த ஐடியா

  திருஷ்டிக்கா விவசாயி செய்த ஐடியா

  விவசாயியின் இந்த ஐடியா தற்போது வொர்க்அவுட் ஆகத் தொடங்கியுள்ளதாம். இதுவரை தன்னுடைய விளைநிலத்தை பார்த்தவர்களின் பார்வை அனைத்தும் சன்னி பக்கம் திரும்பியுள்ளதால் திருஷ்டிக்காக வைத்தது கை மேல் பலன் தந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் சென்சு ரெட்டி.

  திருஷ்டி பூசணிக்காய்

  திருஷ்டி பூசணிக்காய்

  வழக்கமாக வயலில் விளைச்சல் இருக்கும் பருவத்தில் பறவைகள் அண்டாமல் இருக்கவும், மக்களின் கண் திருஷ்டி படாமல் இருக்கவும் சோளக்கொல்லை பொம்மையைத் தான் வைப்பார்கள். அப்படி இல்லையென்றால் பூசணிக்காயில் பயங்கர முகத்தை வரைந்து தொங்க விடுவார்கள்.

  பிரபலமாக்கிய ஐடியா

  பிரபலமாக்கிய ஐடியா

  ஆனால் முதல்முறையாக கண் திருஷ்டி கழிப்பதற்காக மற்றவர்களின் பார்வை விளைச்சல் மீது விழாமல் இருப்பதற்காக சன்னி லியோன் படத்தை போட்ட விவசாயி ஒரே நாளில்பிரபலமாகியுள்ளார். எனினும் இதில் சட்ட விதிமீறல் இருக்கிறதா என்ற விவசாயத்துறையினரும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

  பொதுஇடத்தில் இப்படி செய்யலாமா

  பொதுஇடத்தில் இப்படி செய்யலாமா

  பிகினி உடையில் சன்னி கிளாமராக இருந்த படத்தை பொது இடத்தில் காட்சி படுத்தப்பட்டது தவறா என்று விசாரணை நடக்கிறது. ஆனால் இதற்கு விவசாயி சென்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், எங்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது வராத அதிகாரிகள் இப்போது மட்டும் ஏன் சட்டத்தை காரணம் காட்டி வருகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Andhra farmer puts Sunny leone's glamourous Bikini photo flex in front of his crop field to ward of evil's eye, and his plan works out as all their vision is deiverted to sunny not only the village people but also the media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற