குழந்தைகளை படிக்க வைக்க கிட்னியை விற்ற தந்தை.. ஆனா கடைசியில் பாவம் இப்படி ஆகிடுச்சே.. கொடூரம்!
Subscribe to Oneindia Tamil
அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்த 31 வயதான ஆட்டோ டிரைவர் மதுபாபு கர்லபதி என்பவர் பணத்திற்காகத் தனது கிட்னியை விற்றுள்ளார். தனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கிட்னியை விற்றுள்ளார். ஆனால் ஆப்ரேஷனுக்கு பிறகு உறுதியளித்தபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த 31 வயதான மதுபாபு கர்லபதி, அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகிறார். குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்த செலவு இந்த செலவு எனக் கடன் வாங்க ஆரம்பித்துள்ளார்.

கிட்னி விற்றால் பணம்: முதலில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிய அவர், அடுத்த கட்டமாகச் செயலிகளிலும் கடன் வாங்கத் தொடங்கியுள்ளார். பல ஆன்லைன் லோன் செயலிகளில் அவர் கடன் வாங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் பெரும் தொகை கடனாகச் சேர்ந்துவிட்டது. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் அவர் விழித்துள்ளார். அப்போது தான் பேஸ்புக்கில் கிட்னி விற்றால் பணம் தருகிறோம் என்ற விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார்.
ஒரு கிட்னி கொடுத்தால் ரூ. 30 லட்சம் தருவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் கடன்.. மற்றொரு பக்கம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பணம் தேவை.. இதனால் என்ன செய்வதென்று அவர் யோசித்துள்ளார். அதேநேரம் ஒரு கிட்னி இருந்தாலே போதும் என்று அவருக்குச் சிலர் சொன்ன நிலையில், இது அவருக்கு நல்ல டீல் போலவே தோன்றி இருக்கிறது. ஆனால், கிட்னி விற்கும் முடிவு அவரது வாழ்க்கையே நாசமாக்கும் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.
என்ன நடந்தது: ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இந்த இளைஞர் பாஷா என்ற ஏஜெண்டை முதலில் சந்தித்துள்ளார். ஆப்ரேஷனுக்கு பிறகு நிச்சயம் பணம் வழங்கப்படும் என்பதை அவர் உறுதியளித்துள்ளார். பாஷா சொல்வது சரியாகவே இருந்துள்ளது. இருந்தாலும் கர்லபதி மனதில் சின்ன டவுட் இருந்துள்ளது. சரியாக அந்த நேரத்தில் ஒரு பெண் இவருக்கு போன் செய்துள்ளார். தான் விஜயவாடாவில் இருந்து பேசுவதாகத் தன்னை தானி அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த பெண், தானும் இதுபோல கிட்னியை கொடுத்ததாகவும் ஆப்ரேஷனுக்கு பிறகே சொன்னபடியே பணம் தனக்கு வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த பெண் இதுபோல சொன்னதும் கர்லபதி அந்த கும்பலை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே உடனடியாக கிட்னி தேவைப்படுவதாகச் சொல்லி விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டு கிட்னி எடுக்கப்பட்டுள்ளது.
30 லட்ச ரூபாய்: ஆப்ரேஷனுக்கு முன்பு கர்லபதி சற்று பயந்த நிலையில், யாருக்காக அவர் கிட்னி கொடுக்கிறாரோ... அவரது குடும்பத்தினரையே நேரடியாகப் பேசவும் வைத்துள்ளனர். இதன் பிறகு கர்லபதி ஆப்ரேஷன் செய்துள்ளார். ஆப்ரேஷனுக்கு பிறகு நிச்சயம் 30 லட்ச ரூபாயை ஒரே தவணையில் கொடுப்போம் என உறுதியளித்துள்ளனர். ஆனால், ஆப்ரேஷனுக்கு பிறகு வெறும் ரூ. 50,000 மட்டுமே கொடுத்துள்ளனர்.
இது குறித்து கர்லபதி மேலும் பேசுகையில், "எனக்குக் கடன் இருப்பது அவர்களுக்குத் தெரியும். இதனால் என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். கிட்னி தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதாகவே சொல்லி என்னையும் நம்ப வைத்தனர்.
ஏமாற்றிவிட்டனர்: எனக்கும் ரூ.30 லட்சம் பணம் தருவதாக உறுதியளித்தனர். இந்த பணம் எனது கடனை திருப்பி செலுத்தவும் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரவும் உதவும் என்றே நான் நம்பினேன். இதை வைத்து குழந்தைகளை படிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். இதன் காரணமாகவே அதற்கு நான் ஒப்புக் கொண்டேன். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கண்ணீர்விடுகிறார்.
விசாரணை: இது குறித்து போலீசார் விசாரிக்கும் போது வேறு சில அதிர்ச்சி தகவல்களையும் கண்டறிந்துள்ளனர். நமது நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அது வரிசைப்படியே நிரப்பப்படும். ஒரு வேலை தங்கள் குடும்பத்தில் யாருக்காவது கிட்னி தேவை எனப் பதிவு செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு முதலில் கிட்னி வழங்கப்படும். இதன் காரணமாக கர்லபதிக்கும் கிட்னியை பெற்றவரும் உறவினர் என்பது போலக் காட்டப் போலி ஆவணங்களையும் ரெடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications