ஹாய் விராத்.. கோஹ்லிக்குப் போனைப் போட்ட அனுஷ்கா!
மும்பை: பிரிந்து போய் விட்ட விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இடையே நிலவிவந்த மன இறுக்கத்தை விலக்கிக் கொண்டது போலத் தெரிகிறது.
பாகிஸ்தானுடன் நடந்த ஆசியாக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கோஹ்லிக்கு போன் போட்டுப் பேசியுள்ளார் அனுஷ்கா சர்மா. அப்போட்டியில் கோஹ்லி அபாரமாக ஆடி அரை சதம் போட்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றதோடு இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தாராம் அனுஷ்கா சர்மா. இருப்பினும் இருவரும் மீண்டும் தங்களது மனக் கசப்பைத் தூக்கிப் போட்டு விட்டு இணைய முடிவெடித்துள்ளனர். அதன் முதல் படிதான் இது என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் சந்தோஷமாக கூறுகிறார்கள்.

திருமணத்தால் கருத்து வேறுபாடு
மிக மிக நெருக்கமாக பழகி வந்த அனுஷ்காவும், கோஹ்லியும் திருமணம் தொடர்பான பேச்சுவந்த போதுதான் சில கருத்து வேறுபாடுகளுக்குள் போய் விட்டனர்.

சல்மான் முக்கியம்
சல்மான் கானுடன் சுல்தான் படத்தில் நடிக்க விரும்பினார் கோஹ்லி. ஆனால் அதை கோஹ்லி விரும்பவில்லை. மாறாக, உடனடியாக திருமணம் செய்ய அவர் விரும்பினார்.

தலையிடக் கூடாது
எனது வேலையில் தலையிட வேண்டாம் என்று அனுஷ்கா கூற, கோபமாகி விட்டார் கோஹ்லி. இதனால் பேசுவதை, பார்ப்பதை நிறுத்தினார். இப்படியாக இருவருக்குள்ளும் பிரிவு வந்து விட்டது.

மச்சான் மூலம் தூது
முன்னதாக அனுஷ்காவுடன் சமரசமாகப் போக கோஹ்லியும் கூட விடாமல் முயன்று வந்தார். அனுஷ்காவின் சகோதரர் மூலமாகவும் முயற்சித்து வந்தார்.

மீண்டும் காதல்
இந்த நிலையில் அனுஷ்காவே போன் போட்டு கோஹ்லியுடன் பேசியுள்ளதால் இருவரும் மீண்டும் சேரும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications