சரியாக ஆடாத கோஹ்லி- நேரில் ஆறுதல் சொல்லும் காதலி அனுஷ்கா சர்மா
லண்டன்: போட்டியில் சரியாக ஆடாத கோஹ்லியை இங்கிலாந்துக்குப் போய் கூடவே இருந்து தேற்றி வருகிறாராம் நடிகையும், அவரது காதலியுமான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் அதிரடி வீரர் விராத் கோஹ்லி இதுவரை சரியாக ஆடவில்லை.
அவரது ஆட்டம் ஏமாற்றமாகவே உள்ளது. இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட அவர் அரை சதமோ, சதமோ போடமலேயே இருக்கிறார்.

சவடால் அடித்த கோலி:
இங்கிலாந்துக்குப் போவதற்கு முன்பாகவே நான் எப்படி ஆட வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லித் தரத் தேவையில்லை என்று வேறு சவடாலாக பேசியிருந்தார் கோஹ்லி.

கம்பெனி தரும் அனுஷ்கா:
இந்த நிலையில் அவர் சரியாக ஆடாமல் இருப்பது அவருக்கு நெருக்கடி தரும் வகையில் உள்ளது. இந்த நேரத்தில்தான் அனுஷ்காவும் இங்கிலாந்துக்குப் போய் கோஹ்லிக்கு "கம்பெனி" தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரே ஹோட்டல்:
லண்டனில் புதன்கிழமை மாலை ஒரு ஹோட்டலிலிருந்து வெளியே வந்துள்ளார் கோஹ்லி. கூடவே அவரது காதலி அனுஷ்காவும் கையைப் பிடித்தபடி வந்தார். இந்த ஹோட்டலில்தான் இந்திய அணியினர் தங்கியுள்ளனராம்.

கோஹ்லிக்கு ஆதரவு:
கருப்பு வெள்ளை டிரஸ்ஸில் அழகாக காட்சி தந்த அனுஷ்கா, முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கியது முதலே கோஹ்லியுடன்தான் இருக்கிறாராம்.

அதிகரிக்கும் நெருக்கம்:
இருவரும் எப்போதுமே நெருக்கமாக இருப்பதாகவும், அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதாகவும், சந்தோஷமாக காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோத்பூரில் பிறந்தநாள்:
கடந்த மே மாதம் அனுஷ்கா தனது பிறந்த நாளை ஜோத்பூரில் கொண்டாடினார். அப்போது அவரைப் பார்த்து வாழ்த்துவதற்காக விமானத்தைப் பிடித்து ஓடி வந்தவர் கோஹ்லி என்பது நினைவிருக்கலாம்.

ஜோடிக் கிளிகள்:
அதற்கு முன்பாக நியூசிலாந்தில் இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றினர். கடந்த 2013 முதலே இருவரும் காதலித்து வருகின்றனர்.

வீட்டிலேயே குடித்தனம்:
நியூசிலாந்து தொடருக்கு முன்பாக அனுஷ்காவின் வீட்டுக்கே போய் தங்கியிருந்து விட்டு வந்தார் கோஹ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உற்சாகமூட்டும் அனுஷ்கா:
லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியின்போதும் பெவிலியனுக்கே வந்து கோஹ்லியை உற்சாகமூட்டி வருகிறார் அனுஷ்கா என்பது புதிய தகவல். இந்தப் போட்டியில் விராத் கோஹ்லி தனது முதல் இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications