கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 - ஆந்திரா முதல்வர் ஜெகன்
அமராவதி: கொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 8-வது இடத்தில் இருக்கிறது ஆந்திரா. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,019. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 408.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதாக இருந்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆந்திராவில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தனிமைப்படுத்துல் முகாம்களில் சத்துள்ள உணவுகள் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதி சடங்குகளின் செலவுகளுக்காக ரூ15,000 அரசு நிதி உதவி வழங்கவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications