ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்.. அலறி அடித்து ஓடிய மக்கள்!
மனைவியை கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார்
Recommended Video
விஜயவாடா: பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணி கிராந்தி - பிரதீப். இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
அதனால் மணிகிராந்தியிடம் விவாகரத்து கேட்டு பிரதீப் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதனால் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.

சரமாரி கொலை
இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு பிரதீப் வந்திருந்தார். விவாகரத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரிடம் மனைவியும் பேச முன்வந்தார். அப்போது, பிரதீப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் மணி கிராந்தி அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.

கையில் தலை
பின்னர் வெட்டிய தலையை எடுத்து கொண்டு பிரதீப் தெருவில் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் பிரதீப் நடந்து செல்வதை பார்த்து தெருமக்கள் எல்லாம் அலறி அடித்து கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

விசாரணை
கையில் தலையுடன் அருகில் இருந்த சத்யநாராயணபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீப் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார், விரைந்து வந்து வெறும் முண்டத்துடன் கிடந்த மணி கிராந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த காட்சியில் கொலையாளி தலையுடன் ஆவேசமாக ஸ்டேஷனுக்கு சரணடைய வருவது பதிவாகி இருந்தது. ஸ்ரீநகர் என்றும் நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில், மனைவியின் தலையை வெட்டி கணவன் கொண்டு போன சம்பவம் விஜயவாடாவில் பெரிய பரபரபப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications