அருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல்
இடாநகர்: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கமெங் நதி ஓடுகிறது. இந்த நிலையில் செப்பா என்ற கிராமத்தில் கமெங் நதியின் ஒரு சில பகுதிகள் திடீரென கருமை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நதி கருப்பு நிறமாக மாறியதுடன் நதியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள், தவளைகள் உள்ளிட்ட சிறு நீர் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

திடீரென கருப்பான நதி
இது பற்றி உள்ளூர்வாசிகள் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள், நீரின் தரத்தை சோதனையிடும் நிபுணர்கள் விரைந்து வந்து நதியை பார்வையிட்டனர். மொத்த கரைந்த பொருட்களின்(Total dissolved solids) அதிக உள்ளடக்கம் காரணமாகவே இந்த நதி கருப்பாக மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்வாழ் உயிரினங்களுக்கு சுவாசப் பிரச்சினை
நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாகம், நைட்ரேட், இரும்பு, காப்பர், சல்ஃபைட் போன்ற தனிம தாதுக்கள் இருக்கும். இதையே டிடிஎஸ் (Total dissolved solids) என்று குறிப்பிடுவார்கள். அதாவது நீரில் மாசு ஏற்படும்போது இதன் அளவு அதிகரித்து நீரின் தன்மையும் வேறு வேறு நிறங்களுடன் நச்சுத் தன்மை மிக்கதாக மாறும். தற்போது கமெங் நதிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வாழ் உயிரினங்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு உயிரிழக்கின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டி.டி.எஸ் அளவு அதிகரிப்பு
கமெங் நதியில் தற்போது டி.டி.எஸ் அளவு ஒரு லிட்டருக்கு 6,800 மி.கி உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 300-1,200 மி.கி என்ற சாதாரண வரம்பைக் காட்டிலும் மிக அதிகம் என்று மாவட்ட மீன்வள மேம்பாட்டு அதிகாரி கூறினார். கமெங் நதியின் மேற்பரப்பில் மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நதி இந்தளவுக்கு மோசமாவதற்கு சீனாதான் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீனாதான் காரணம்
அதாவது செப்பா கிராமம் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் சீன ராணுவம் எல்லையைத் தாண்டி வந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது என்றும் கட்டுமான பொருட்களின் ரசாயன கழிவுகள் கலப்பதால் நதி மோசமாகி விட்டதாக செப்பா கிராம மக்கள் கூறியுள்ளனர். அதிக அளவு மீன்கள் இறந்ததன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் குழுவை உடனடியாக அமைக்குமாறு மாநில அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சொந்தம் கொண்டாடும் சீனா
லடாக் எல்லையில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் சீனா, அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 90,000 ச.கி, மீட்டர் நிலத்தை ஆண்டாண்டு காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. எப்படியாவது எல்லையை வளைத்து போட வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லையோர பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்வது, சாலை போடுவது என்று சீனா தொடர்ந்து செய்து வருகிறது. எல்லையை ஒட்டிய லுங்ரோ லா, ஜிமிதாங் மற்றும் பும் லாவில் சீன ராணுவத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications