சித்தப்பா சிவ்பால் யாதவுடன் அகிலேஷ் அக்கப்போர்... சமாஜ்வாடி கட்சி உடையும் என முலாயம்சிங் 'வார்னிங்'
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையின் மூத்த அமைச்சரும் அவரது சித்தப்பாவுமான சிவ்பால் யாதவ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டி வருகிறார். அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவோ, சிவ்பால் யாதவுக்கு நெருக்கடி கொடுத்தால் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. அதே நேரத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

என்ன பிரச்சனை?
சிறையில் உள்ள நிழல் உலக தாதா முக்தார் அன்சாரியின் புதிய கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டார் சிவ்பால் யாதவ். ஆனால் இதற்கு அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையின் தொடக்கம்.

ராஜினாமா மிரட்டல்
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பலரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்; அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னுடைய பேச்சை கேட்பது இல்லை; இப்படியே நீடித்தால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என தொடர்ந்து மிரட்டி வருகிறார் சிவ்பால் யாதவ். ஆனால் அகிலேஷ் யாதவோ இது குறித்து கண்டுகொள்ளவில்லை.

முலாயம்சிங் எச்சரிக்கை
இந்த நிலையில் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் தலைமையகத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முலாயம்சிங், சிவ்பால் யாதவுக்கு எதிராக கட்சியில் சதி நடக்கிறது. சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து விலகினால் அவருடன் நிறைய பேர் வெளியேறிவிடுவார்கள்... இதனால் கட்சியே இரண்டாக பிளவுபட்டு விடும் என எச்சரித்தார். முலாயம்சிங் இந்த எச்சரிக்கை விடுத்தபோது இறுகிய முகத்துடன் அகிலேஷ் யாதவும் அமர்ந்திருந்தார்.

சிவ்பால் யாதவ் மீண்டும் மிரட்டல்
முலாயம்சிங்கின் இந்த ஆதரவு பேச்சு சிவ்பால் யாதவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. எடாவா என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியலை முதல்வரிடம் தரப் போகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் ராஜினாமா செய்வேன் என மீண்டும் மிரட்டியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications