பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியரா? 10% சம்பளம் கட் - அசாம் அரசு சட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திப்ருகர்: அதிக சம்பளம் வாங்கியும் வசதியாக உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை தவிக்கவிடுவது பலரது வாடிக்கையாக உள்ளது. வயதான காலத்தில் உணவுக்கும், இருக்க இடமின்றியும் பலர் தவித்து வருகின்றனர்.

Assam Government Staff Will Lose 10% Of Salary For Not Looking After Parents

சிலர் தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். இதனால் வயதான காலத்தில் ஆதரவின்றி பலர் தவித்து வருகின்றனர்.

வயதான பெற்றோர்களை காக்கும் வகையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

அதன்படி, வயதான பெற்றோர்களை வருமானம் அதிகம் பெற்றும் முதியோர் இல்லத்தில் சேர்த்தால், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பல மாநில அரசுகளுட் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government employees in Assam who do not provide for their parents and siblings with disabilities stand to lose 10 per cent of their salary, with the state Assembly passing a bill today for their better upkeep.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற