For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் நிலையம் போகாமலே புகார் பதிவு செய்யும் வசதி! விரைவில் நாடு முழுவதும் அறிமுகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காவல் நிலையம் போகாமலே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி நாடு முழுவதிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குவஹாத்தியில் நடந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் குவஹாத்தியில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏடிஎம் பாணியில், எப்.ஐ.ஆர் பதிவு மையங்களை ஆங்காங்கு நிறுவுவதுதான் அந்த முடிவு,

ATM-style machines to help citizens log police complaints

இந்த வகை மெஷின்கள், தேசிய வங்கிகளின் கிளைகள் அமைந்துள்ள இடங்களில் வைக்கப்படும். புகார் தெரிவிக்க காவல் நிலையம் செல்லாமல், இந்த வகை மெஷின்களின் மூலமாக புகாரை பதிவு செய்ய முடியும். இதனால் போலீசாருடன் ஏற்படும் மோதல், தேவையற்ற காலவிரையம், 'பணச்செலவு' போன்றவை தவிர்க்கப்படும்.

இந்த வகை மெஷின்கள் ICLICK என்று அழைக்கப்படும். புகாரை பதிவு செய்தவுடன் அதற்கான ரசீதும் புகார்தாரர்கள் கைகளுக்கு கிடைத்துவிடும். இதைக் கொண்டு, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலையை தெரிந்துகொள்ள முடியும். புகார் பதிவானதும் மேலதிகாரிகளுக்கும் அது குறித்த தகவல் சென்றுவிடும் என்பதால், கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அதுகுறித்து மேலதிகாரிகளால் கேள்வி எழுப்ப வசதியாக இருக்கும்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இதுபோன்ற ஒரு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் புகார் மெஷின்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான புகார்களை மட்டுமே அங்கு பதிவு செய்ய முடியும்.

அதே நேரம், பெங்களூருவில் கடந்த மாதம் முதல் புகார் மெஷின் வசதி அறிமுகமாகியுள்ளது. அங்கு அனைத்து வகையான புகார்களையும் பதிவு செய்ய முடிகிறது. பெங்களூரு பாணியில்தான் நாடு முழுவதிலும் புகார் மெஷின்கள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே ஆலோசனை கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள பிரதமர் மோடியிடம் புகார் மெஷின் குறித்து விளக்கி அவரது ஒப்புதலை பெற உள்துறை அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

English summary
There is good news for those who dread registering a complaint at a police station. The government may soon launch a hi-tech project that will minimise policemen's interference and make the police accountable for not taking note of complaints from citizens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X