ஆந்திரா:ஜெகனுக்கு இறங்கு முகம்? பற்ற வைத்த சர்வே- பாஜக, நாயுடு கூட்டணி அமைந்தால் தலைகீழ் 'ட்விஸ்ட்'?
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தற்போதைய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு காத்திருப்பதாக "Atma Sakshi Group" நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு வியூகங்களை வகுத்து அசைக்க முடியாத சக்தியாக நிலைபெற்றுள்ளார் என்பது பொதுவான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இதுவரையிலான கருத்து கணிப்புகள், லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 'சுனாமி' அலை வீசுகிறது. அத்தனை சீட்டுகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸே அள்ளப் போகிறது என்றே தெரிவித்துள்ளன.

டைம்ஸ் நவ் டிவி நேற்று இரவு வெளியிட்டிருந்த கருத்து கணிப்பிலும் இதே போன்ற முடிவுகள்தான் இடம் பெற்றிருந்தன. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 24 முதல் 25 இடங்கள் கிடைக்கும் என்றும் தெலுங்குதேசம் கட்சிக்கு 0 முதல் 1 இடம்; ஜனசேனா, பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஜெகன் மோகன் ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
ஆனால் அதே நேரத்தில் Atma Sakshi Group வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பு முடிவுகள் ஜெகன் மோகன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்களது கருத்து கணிப்பு முடிவுகள் 2019 சட்டசபை, லோக்சபா தேர்தலில் அப்படியே பிரதிபலித்தன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2019 சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 139 முதல் 142 இடங்களைக் கைப்பற்றும் என கணித்தது அந்நிறுவனம். அத்தேர்தலில் ஜெகன் மோகன் கட்சி மொத்தம் 151 இடங்களைப் பெற்றது. அதேபோல 2019 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 25 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகள் என கணித்திருந்தது. அதேபோலவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 இடங்களைக் கைப்பற்றியது. இதனால்தான் ஆந்திராவில் இப்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தற்போது நடைபெற உள்ள சட்டசபை, லோக்சபா தேர்தல் தொடர்பான Atma Sakshi Group-ன் கருத்து கணிப்பு விவரம்:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் முடிவுகள் எப்படி இருக்கும்?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் -68
தெலுங்குதேசம்- 86
ஜனசேனா கட்சி-6
தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியால் முடிவுகள் எப்படி இருக்கும்?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் -60
தெலுங்குதேசம்- 95
ஜனசேனா கட்சி-13
பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியால் முடிவுகள் எப்படி இருக்கும்?
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 98 முதல் 100 இடங்கள்
தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி, பாஜக- 75 இடங்கள்
இடதுசாரிகள், தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியால் முடிவுகள் எப்படி இருக்கும்?
தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி, இடதுசாரிகள்- 115-112 இடங்கள்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 56 முதல் 58 இடங்கள்
லோக்சபா தேர்தல்:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தனித்தே போட்டியிட்டால் முடிவுகள் எப்படி இருக்கும்?
மொத்தம் உள்ள 25 இடங்களில்
தெலுங்குதேசம்- 14
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 6
தெலுங்குதேசம், ஜனசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டால்
தெலுங்குதேசம், ஜனசேனா - 17
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 7
இவ்வாறு Atma Sakshi Group கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications