நீங்க நல்லா இருக்கனும்.. இந்தியர்கள் மனதை வென்ற ஆஸ்திரேலியர்! உத்தரகண்ட் சுரங்க மீட்பில் ரியல் ஹீரோ
டேராடூன்: உலகக்கோப்பையில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் பக்கபலமாக நின்று இந்தியர்களின் மனங்களை வென்று இருக்கிறார் ஆஸ்திரேலியர் ஒருவர். இந்த மீட்புப் பணியில் அவர் ஆற்றிய பங்கு என்ன? விரிவாக பார்ப்போம்.
கடந்த வாரம் ஞாயிறு அன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களை அமைதியாக்கி கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்தினரை எல்லாம் இழுத்து வசைமாறி பொழிந்தனர். ஆஸ்திரேலியா என்றாலே அலர்ஜி என்று தோன்றும் அளவுக்கு அவர்களின் செயல்பாடு இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிடம் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இந்தியர்களின் மனதை வென்று இருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுரங்க தொழிலாளர் அமைப்பின் தலைவர் அர்னால்டு டிக்ஸ். அர்னால்டு என்ற பெயரை கேட்டாலே வலிமைதான் நம் நினைவுக்கு வரும். அதற்கு துளிகூட பிசகாமல் உத்தராகண்ட் சுரங்க மீட்பு பணியில் தன்னுடைய பங்களிப்பை அவர் செலுத்தி உள்ளார்.
இதுகுறித்து பிரபல எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் தெரிவிக்கையில், "அர்னால்டு டிக்ஸ். இந்திய மனங்களை வென்று ஆஸ்திரேலியர் சர்வதேச சுரங்க தொழிலாளர் அமைப்பின் தலைவரான இவர் உலகின் எங்குச் சுரங்க தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வந்து நிற்பவர். உத்தரகண்ட் மாநிலத்தில் சில்க்யாராவில் சுரங்கம் இடிந்த செய்தி கேட்டு உடன் இந்தியா வந்தார். மீட்புப் பணிகள் நடைபெறும் சுரங்கத்தின் வாயிலில் 11 நாட்களும் இருந்தார். 11 நாட்கள் என்றால் வந்து இறங்கியது முதல் 24 மணி நேரமும் அங்கே மக்கள் வழங்கிய சப்பாத்திகளை உண்டு மக்களோடு மக்களாக இருந்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளித்தார், ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்தார், ஒரு தேசத்திற்கே நம்பிக்கையளிப்பது அத்தனை சுலபமான காரியமா என்ன? கடும் குளிரில் அங்கே இருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியிலேயே அமர்ந்து கிடந்தார், கழிப்பறை குளியலறை வசதிகள் எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை அங்கே இருந்ததை வைத்துச் சமாளித்தார். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு நள்ளிரவில் தான் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
இந்திய மனங்களை வென்றுவிட்டுக் கிளம்பும் மற்றும் ஒரு ஆஸ்திரேலியராக வரலாற்றில் இடம்பெறுவார் ஆர்னால்டு டிக்ஸ். புது டெல்லியில் அவரை வைத்து ஒரு புகைப்பட நிகழ்வு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஒரு டெல்லி நிரூபர் தெரிவித்தார். ஆனால் டெல்லி போட்டோ ஷூட்டில் பயன்படுத்தப்படும் ஒளியை விடச் சுரங்கத்தின் வாயிலில் கட்டப்பட்ட ப்ளாஷ் விளக்குகளின் வெளிச்சம் அதிகம் என்பதை மட்டும் புது டெல்லி புரிந்துகொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications