பெங்களூரில் பெண்ணிடம் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துக் கொண்டு ஓடிய ஆட்டோ டிரைவர்

கர்நாடக குடியிருப்பு வாரியத்தின் மேற்பார்வையாளர் சுமித்ரா தேவி(56). அவர் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள மைசூர் வங்கி சர்க்கிளில் உள்ள காவேரி பவனில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றார். மகளின் வீட்டில் தங்கியிருக்கும் அவர் காலை 8 மணிக்கு மாதவன் பூங்கா அருகே ஆட்டோவில் ஏறினார்.
குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் அவர் 5 ரூ. 100 நோட்டுகளை ஆட்டோ டிரைவரிடம் கொடுத்துள்ளார். அதற்கு அவரோ முழு ரூ.500 நோட்டு தரும்படி சுமித்ராவிடம் கேட்டுள்ளார். சுமித்ராவும் தனது கைப்பையில் இருந்த ரூ.10,000 கட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். அதை கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தி கைப்பையை பறித்துள்ளார்.
இது குறித்து சுமித்ரா கூறுகையில்,
நான் எனது கைப்பையை ஆட்டோ டிரைவரிடம் இருந்து வாங்க போராடினேன். அப்போது அவர் ஆட்டோவை இரண்டு வாகனங்களுக்கு இடையே நிறுத்தி எனது பணம் தெருவில் கிடப்பதாக தெரிவித்தார். என்னை கீழே இறங்க வைத்து தப்பிக்கலாம் என்று அவர் நினைத்தார். நான் ஆட்டோவில் இருந்து இறங்காததால் என்னை கீழே தள்ளிவிட்டார். இதில் எனக்கு காலில் அடிபட்டது. அப்போது அந்த வழியாக சென்ற முதியவரிடம் உதவி கேட்டேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை.
அந்த ஆட்டோவின் பதிவு எண் கேஏ-01-2512 ஆகும். இனி நான் ஆட்டோவிலே செல்லவே மாட்டேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பதிவு எண் ஒரு சரக்கு ஆட்டோவுடையது என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் ஆட்டோவில் சென்ற 2 சகோதரிகளிடம் டிரைவர் நடுரோட்டில் தகாத முறையில் நடந்து கொண்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பலர் பார்த்தபோதிலும் யாரும் உதவிக்கு வரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தட்ஸ்தமிழ் ஊழியரான சதீஷ் குமார் அதிகாலையில் ஆட்டோவில் சென்றபோது அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.10,000 ரொக்கத்தை ஆட்டோ டிரைவர் பறித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications